Saturday, August 31, 2024
யாழில் வட்டிக்கு பெற்ற கடனைக் கட்ட முடியாமல் 2 குழந்தைகளின் தாயான கேதீசா மரணம்!!
யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், வாங்கிய கடனை செலுத்த மீளச் முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனைதொடர்ந்தே நேற்றையதினம் (30-08-2024) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாணவி துசானி தவறான முடிவெடுத்து பலி!!
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி கற்று வரும் மாணவி இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??
நோர்வேயிலிந்து யாழ் வந்த 55 வயது விமலேந்திரன் சிங்கள யுவதியுடன் உறவு கொண்டு வீடியோவை மனைவிக்கு அனுப்புவது ஏன்??
நோர்வேயில் தனது மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 55 வயதான கதிர்காமர் விமலேந்திரன், அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து, சிங்கள யுவதி ஒருவருடன் குடும்பம் நடாத்தி வருவதாகத் தெரியவருகின்றது. குறித்த யுவதியுடன் சேர்ந்து உறவு கொள்ளும் வீடியோக்களை நோர்வேயில் உள்ள தனது மனைவிக்கு வட்சப் மூலம் பல தடவைகளில் அனுப்பியுள்ளார்.
இதனால் கடுப்பான மனைவி நோர்வேப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விமலேந்திரன் இனிமேல் நோர்வே செல்ல முற்பட்டால் அங்கு விமான நிலையத்தில் வைத்து கைதாகலாம் எனவும் மனைவியின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சொத்துக்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக விமலேந்திரனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. தம்பதிகளான இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. இந் நிலையில் தனது மனைவியின் சீதனக் காணி மற்றும் வீடு என்பனவற்றை மனைவியின் அண்ணனின் பெண் பிள்ளை, அக்காவின் பிள்ளை என்பவற்றுக்கு மனைவி எழுத முற்பட்ட போதே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமலேந்திரன் கடந்த வருடம் மனைவியைத் தாக்கிய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறை வரை சென்றுள்ளார்.
அத்துடன் மனைவி இருக்கும் பகுதியிலிருந்து விலகியே வாழ வேண்டும் என்றும் அவருக்கு பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. நோர்வேயில் உள்ள தனது வீட்டுக்குச் செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கிருந்து கடந்த வருட இறுதியில் விமலேந்திரன் இலங்கை வந்தார். மல்லாகத்திற்கு அண்மையாக கே.கே.எஸ் வீதியோரம் அமைந்துள்ள மனைவின் சீதன வீட்டிலேயே தற்போது விமலேந்திரன் வாழ்ந்து வருகின்றார். குறித்த வீட்டில் விமலேந்திரனுடன் 30 வயது மதிக்கத்தக்க சிங்கள யுவதி ஒருவரும் வசித்து வருகின்றார்.
இதனை அறிந்த விமலேந்திரனின் மனைவியின் உறவுகள் இது தொடர்பாக அண்மையில் பொலிசாருக்கு முறையிட்டிருந்தார்கள். அங்கு சென்று விசாரணை நடாத்திய பொலிசார் விமலேந்திரனுடன் வாழும் யுவதி மற்றும் விமலேந்திரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தாம் தலையிட முடியாது என உறவினர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
இதன் பின்னரே விமலேந்திரன் குறித்த யுவதியுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருவதாக நோர்வேப் பொலிசாருக்கு மனைவி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இலங்கையின் சைபர் கிறைம் பொலிசாருக்கும் மனைவி ஒன்லைன் மூலமாக முறைப்பாடு கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Friday, August 30, 2024
விசிட் விசாவில் கனடா சென்றவர்களுக்கும் செல்லவுள்ளவர்களுக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ!!
கனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில்,
அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்,
தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா வந்து அகதி அடிக்கும் அனைவரும் இதை கவனம் எடுத்தே ஆகுங்கள். உங்கள் கனடா வாழ்வு நாசம்
கனடா வந்து அகதி அடிக்கும் அனைவரும் இதை கவனம் எடுத்தே ஆகுங்கள். உங்கள் கனடா வாழ்வு நாசம் ஆக்க வேலியே பயிரை மேய்கின்ற வேலை நடக்கிறது. அதனால் மிக மிக இதில் கவனமாக கடவுங்கள்.
அகதி கேஸ் செய்யும் அனைவரும் உங்கள் ஈமேலின் பாஸ்வேட்டை நீங்களும் வைத்திருக்கவே வேண்டும் என்பதோடு அவர்கள் அரசிடம் பணம் அகதி கேசுக்கு பதிந்து எடுக்கினமா என்றும் பாருங்கள் (லீகலேற்) எடுத்தால் உங்களிடம் எந்த பணமும் இவர்கள் அறவிட முடியாது.
லீகலேற் பணம் எடுத்தால் கனடா வரவளைத்த உங்கள் உறவுகளுக்கு வட்டி குட்டியோடு அரசு தரும் 5000 டொலசுக்கு ஒரு லட்சம் டொலஸ் வில் கூட அடுத்து வர போகும் அரசு அனுப்ப பல சட்ட சந்தர்ப்பமே உள்ளது. அதனால் மிக மிக கவனம்.
இதோடு நீங்க இவர்களுக்கு கொடுக்கும் பணத்துக்கு ஒரு டொலசுக்கு கூட ரக்ஸ் கட்டியே ஆக வேண்டும். நீங்க ரக்ஸ் கட்டவில்லை என்பதை இப்போது அகதி கேசில் நேரடியாகவே கேட்கின்றனர். அதில் நீங்க கட்டவில்லை என்ற உண்மை சொல்லியே ஆவியள். அதே உங்களை சட்டவிரோத பண பரிமாற்றத்தின் ஊடாக கள்ள கேஸ் பணம் கொடுத்து எழுதி அகதி கோர முயல்வதாக கோருவதாக முடிவு எடுக்கின்றனர்.
அதனால் கேஸ் அம்போ என்பதோடு கனடா உங்களை திருப்பி அனுப்பும் றீ அப்பீல் கூட இதற்கு இல்லை.
கடந்த கிழமை கூட ஒருவருக்கு அகதி கோரிக்கை ஆராயும் போது நடந்த சம்பவம் இதனால் உடனடியாகவே நிராகரிப்பதையும் காரணத்தையும் சொல்லி உள்ளனர்.
அதனால் பணம் கொடுப்பவர்கள் உடனுக்கு உடன் எதற்கான பணம் வேண்ட படுகிறது என்ற ஆதார பேப்பறோடு ரக்ஸ் கட்டியதை பெற்றே ஆகுங்கள். அப்படி செய்வதால் மட்டுமே உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ள முடியும்.
அதோடு நீங்க மொழி தெரியாத காரணத்தால் 5000 கனடா காசின் உள்ளே செய்ய வேண்டிய உங்கள் அகதி கேசை அகதி வோட்டுக்கு + லோயறுக்கு 3000 + பேப்பர்ஸ் வேலைக்கு 2000 அவ்வளவே உண்மையான செலவு. மிகுதி எவராவது வேண்டினால் அது களவு உங்களை ஏமாற்றி வேண்டும் பணம்.
நீங்க நினைக்கலாம் கையால் கொடுப்பது எப்படி தெரியும் என்று. இவர்கள் அகதி பொய் கேஸ் எழுதலாம் என்ற சந்தேகத்தில் புலாநாய்வு ஆட்களின் கண்ணின் உள்ளே தான் இருக்கின்றனர். அவர்கள் உங்கள் பரிமாற்றத்தையும் கங்காணித்து றிப்போட் அனுப்பியே ஆவார்கள். அனுப்புகின்றனர்.
நீங்க நினைப்பது போல் நபர்கள் சென்றுதான் தகவல் எடுக்க வேண்டும் என்பதோ கமறா பூட்டி எடுக்க வேண்டும் என்பதோ இல்லை. இப்போது ஒரு லேசர் கருவியே எல்லாத்தையும் துல்லியமாக அருகாமை எங்காவது இருந்தே கவர் பண்ணும்.
அதனால் தலையை நீங்களே அடைவு வைக்காது உங்கள் பணம் அனைத்துக்கும் ரஸ்சோடு றீசீற் வேண்டியே ஆகுங்கள். இந்த நாட்டில் ஒரு கோப்பிக்கு கூட ரக்ஸ் கட்டியே ஆக வேண்டும் இது சட்டம்.
சட்டத்தை நீங்க கனடா வந்த வரக்கிடையில் தவறு செய்வதாக புறு ஆனால் எதையுமே செய்ய முடியாது. அப்புறம் கனடாவில் வாழ அனுமதிக்கவே மாட்டார்கள் உங்களை. அப்புறம் நீங்க காசையும் இழந்து கனாடாவையும் இழந்து நடு தெருவில் தான்.
அதோடு நீங்க கட்டும் பணம் கிட்ட தட்ட அனைத்துமே உங்களுக்கு நீங்க ரக்ஸ் செய்யும் போது அதாவது உங்கள் வரவு செலவு கணக்கை அரசுக்கு காட்டும்போது உங்கள் கைக்கு திரும்ப வந்தே ஆகும். இது சட்டம் இங்கே.
கனகசபை குழந்தையர் அவர்களின் முகநூல் பதிவு
யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம் | Jaffna Police Officer Dies From Blood Clot
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thursday, August 29, 2024
கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Information On Canada Visitor Visa For Foreigners
கனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேர் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசிட்டர் விசா
விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
Information On Canada Visitor Visa For Foreigners
எனினும், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நண்பர்களுன் சாராய விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண குடும்பஸ்தர் குத்திக் கொலை!!
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதான குடும்பஸ்தர் என தெரிவிக்க்படுகிறது.வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி, இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டு மாணவிகள் வன்கொடுமை : பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இரண்டு பதின்ம வயது மாணவிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமம் கோதமிகம மகா வித்தியாலய அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி தரங்க சமீர சில்வா நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய அதிபர் சில காலமாக பாடசாலையின் இரண்டு பதின்ம வயது மாணவிகளை கடுமையாக வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
கதிர்காமம் காவல்துறையால் கைது
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கதிர்காமம் காவல்துறையினர் மற்றும் கொழும்பு சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து அதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மீண்டும் விசாரணைக்கு
பின்னர், இது தொடர்பான வழக்கு நேற்று (28)திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய அதிபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பெற்றோர்கள் குழு மௌனப் போராட்டத்தை நடத்தியது.
யாழ் கோட்டை, பண்ணைப் பகுதிகளில் கள்ளக்காதலர்களின் அட்டகாசம்!! ஆளுநர் கடும் உத்தரவு!!
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிசாரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் ,
சமூக சீர்கேடான விடயங்கள் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனை அடுத்து குறித்த பகுதிகளில் திடீர் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளை மேற்கொள்ளுமாறும் , இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இதர பகுதிகளையும் கண்டறிந்து , இந்த செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்
Wednesday, August 28, 2024
ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள்!
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 39 வேட்பாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 23 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முப்பத்தெட்டு வேட்பாளர்களில் பதினைந்து வேட்பாளர்களே கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
முகநூல் கணக்குகூட இல்லை
எஞ்சிய இருபத்து மூன்று பேரில் மூவர் பற்றிய தகவல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அவர்கள் அழைத்தபோது, மூன்று பேரில் இருவர் வேறு நபர்களின் சார்பாக அழைக்கப்பட்டதாகவும், இருபத்து மூன்று பேரில் குறைந்தது ஐந்து பேருக்கு சமூக ஊடகங்களின் கீழ் முகநூல் கணக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை
சில வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
38 தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை தமது அமைப்பின் இணையதளத்தில் வெளியிட முயன்றபோது, பதினைந்து பிரசாரகர்களைத் தவிர மற்ற 23 பேரிடம் அவற்றைப் பெற முடியவில்லை என்றும் அவர்கள் பேசக்கூட வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சிலிருந்து ஜேர்மன் சென்ற தமிழ் காவாலிகள் யாழ்ப்பாண குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!
பிரான்ஸ் பகுதியில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் வேலை செய்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பிரான்சிலிருந்து சென்ற சில தமிழ் காவாலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வேலைத்தளத்தை விட்டு வெளியே வந்த குறித்த குடும்பஸ்தரை கார் ஒன்றில் வந்தவர்கள் மறித்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.
பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை வைத்திருக்கும் தமிழ் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட பிணக்கே குறித்த தாக்குதலுக்கு காரணம் எனவும் தாக்கியவர்களில் இருவரை தனக்கு அடையாளம் தெரியும் எனவும் ஜேர்மன் பொலிசாரிடம் குடும்பஸ்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழன் மனோ உயிரை மாய்த்தது ஏன்?
இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.
இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியுள்ளார்.எனினும், அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு, Bridging Visa வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான நிலையில், அவர் மன அழுத்ததில் இருந்ததாகவும், தனக்கு தானே எரியூற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 27, 2024
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது | A Man From Switzerland Was Found Dead In Vavuniya
புதிய இணைப்பு
வவுனியா - கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐய்யனார் கோவில் திருவிழாவில் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா(Vavuniya) வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது இன்று (26.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது வழிருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதனையடுத்து சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை | Warrnin To Peoples Bank Users
மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி, "சென்ட்ரல் லோன்" என்ற நிறுவனத்துடன் இணைந்து, சலுகை வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட வங்கித் தகவல்களையும், முக்கியத் தகவல்களையும் பல்வேறு தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் எண்களின் மூலம் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வங்கி பரிவர்த்தனைகள்
இந்த நிலையில், "சென்ட்ரல் லோன்" என்ற நிறுவனத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் வேறு எந்த மூன்றாம் தரப்பினர் ஊடாகவும் கடன் வழங்குவதில்லை என்றும் மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அத்தோடு, கணக்கு எண்கள், வங்கி அட்டை எண்கள், பின் எண்கள், OTP எண்கள் போன்றவற்றை அல்லது நிகழ்நிலை பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இதுபோன்ற மோசடி தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் மக்கள் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
பிருத்தானியாவில் இலங்கைத் தமிழ்ப் பெண் உமா குமரன் என்ன ஆனார்?
காரணமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையிலிருந்து ஒருவர் நாடாளுமன்றிற்கு தெரிவாகி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆம். அவர் தான் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன்.
இவருக்கு உலக வாழ் தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவரை சர்வதேச ஊடகத்தின் தமிழ் சேனல் நேரடி நேர்காணல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.அந்த காணொளியில் இலங்கை தொடர்பாக பல கேள்விகள் எழுப்பட்டது. அதில் பிரதானமாக, உங்களின் அரசியல் பிரச்சாரங்களின் போது, இலங்கையின் போர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நீதி தொடர்பில் தாங்கள் வெளிப்படையாக பேசியிருந்தீர்கள். இதற்காக உங்களின் பதவி காலத்தில் என்ன செய்யப்போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உமா குமரன், “எமது பிரதமர் கியஸ்டாமர் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான கெத்ரின் மிஸ்க் போன்ற அனைவருமே தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு முன்னராக இருந்து இலங்கை தமிழ் மக்களுக்கான நீதிக்காகவும் பொறுப்புக்காவும் போராடிய வண்ணமே உள்ளனர்.
பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக முதல் இலங்கைத் தமிழ் பெண்! | Sri Lankan Tamils As A Member Of Parliament In Uk
மேலும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதில் பிரித்தானியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என நாம் ஆட்சிக்கு வரும் முன்பிருந்தே வலியுறுத்தி வருகின்றோம்.நடந்த அனைத்துக்கும் பொறுப்பானவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். இறுதிகட்ட போரின் போது, தமிழர்கள் இடத்தில் ஏற்பட்ட வலிகளும் துன்பங்களும் மேலும் பதிந்துள்ள நினைவுகளும் ஒருபோதும் எம்மைவிட்டு போய்விடாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.தொடர்ந்து உமா குமரனிடம், ஆனால், இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது உங்களின் கட்சி அதாவது, லேபர் கட்சி தான் பிரித்தானியாவில் அப்போது ஆட்சியில் இருந்தது.
அந்த நேரத்தில் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் அநியாயங்களை தடுப்பதற்கு ஏன் அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் இருக்கின்றது அல்லவா? என கேள்வி எழுப்பப்பட்டது.தொடர்ந்து அதற்கு பதிலளித்த உமா குமரன், “இந்த விடயம் அடிக்கடி பேசப்பட்டு இருக்கின்றது.
நான் அந்த வேளையில் லேபர் எம்.பி ஒருவரிடம் பணியாற்றினேன். அப்போதைய வெளியுறவு செயலாளராக இருந்த டேவிட் மில்லிபேண்டை நாங்கள் பல தடவைகள் சந்தித்தோம். டேவிட் மில்லிபேண்ட், இலங்கையர்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் தொடர்பில் முழுமையான அக்கறையை யாரும் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அரசாங்கத்தின் செயற்பாட்டை நிறுத்துமாறு சத்தமாகவும் வெளிப்படையாகவும் குரல்கொடுத்தார்.அவரது குரல் ஓங்கி ஒலித்ததாக இன்றும் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் சொல்ல கேட்கின்றோம்.
ஆனால் காலம் கடந்து பின்நோக்கி பார்த்து ஏதாவது வேறு விதமாக செய்திருக்கலாம் அல்லது இன்னும் உறுதியாக ஏதாவது செய்திருக்கலாம் என யோசித்திருக்கலாம்.
ஆனால் நாம் இப்போது என்ன செய்ய போகின்றோம் என்பதை மட்டுமே பார்க்கவேண்டும். வலிகள் மிக்க 15 ஆண்டுகள் கடந்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.இலங்கை அரசாங்கமும் இதற்கு நீதி கிடைக்க விசாரணை நடத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
மனைவி உயிரிழந்த விரக்தி- யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு..!
யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியை பிரிந்த துயரத்தில் இவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றையதினம்(27) குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Monday, August 26, 2024
வவுனியாவில் அம்புலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர் – நடந்தது என்ன ?
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து காவு வண்டியில் இருந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம் ஏற்பட்டு சாரதி மீது தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது
இதனை தொடர்ந்து வைத்தியர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டதுடன் நோயாளர்காவு வண்டியில் இருந்த சாரதி உட்பட இருவர் நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நோயாளர் காவு வண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியாசாலையில் இருந்து 4ம் கட்டைப் பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு செல்வது வழமை. குறித்த உணவுகளை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி பயணித்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.
குறித்த ஆயுள்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக நெளுக்குளம் நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிஸிற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளனர்
இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பியதாகவும் இதன்போது சகோதரமொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக தன்னை கடத்துவதாக நினைத்து குதித்தாக வைத்தியசாலையின் ஒரு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை நோயாளர் காவு வண்டியின் பயணிக்கும் விளக்க அட்டையில் (running chart) குறித்த ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் வவுனியா பொதுவைத்தியசாலைக்கும் இடையில் சென்று வருவதற்கான மொத்த தூர அளவு 20 கிலோமீற்றராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால உண்மையாகவே 16கிலோ மீற்றர் தான் தூர அளவு என்பதனால் அதனை சமப்படுத்துவதற்காக வேப்பங்குளத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் நெளுக்குளம் திசைக்கு சென்று குழுமாட்டுச்சந்தியிலிருந்து மருக்காறம்பளை ,
தாண்டிக்குளம் பகுதிகள் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு செல்வதனால் 20 கிலோமீற்றர்கள் சமனாகும் அதற்காகவே நோயாளார் காவு வண்டியை திருப்பியதாகவும் இதனால் குழுப்பமடைந்த பெண் வைத்தியர் அச்சத்தில் கீழே குதித்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் முறைப்பாட்டை மீளப்பெறுவதற்கான முயற்சிகளும் நேற்றைய தினம் இரவு இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது
மூத்த மகன் ஊருக்கு வருகின்றேன்... நாமலின் தேர்தல் பிரசாரம் | Sri Lanka Presidential Election 2024
நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அன்பான, தாய், தந்தையரே மூத்த மகன் ஊருக்கு வருகிறேன்” என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றேன்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகள் எம்மை விட்டுச் சென்றாலும் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பதை எமது முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம். அடிமட்ட மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
Sri Lanka Presidential Election 2024
தேர்தல் காலத்தில் வரப்பிரசாதங்கள் , தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றுக்காகத் தவளைகளைப் போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய தேவைகளுக்காகக் கட்சி தாவல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அண்மைக்காலமாக வழங்கியுள்ள தீர்ப்புக்களை வரவேற்கிறேன்.
நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம். நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
தேர்தல் வெற்றிக்காகப் பொய்யான வாக்குறுதிகளை எத்தரப்பினருக்கும் வழங்கப் போவதில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த விமலநாதன் அடித்துக் கொல்லப்பட்டது ஏன்?
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
குறித்த வீடட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது வழிருந்தில் ஈடுபடட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன் போது சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்வவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
யாழில் தீ மூட்டி எரிந்த இளம் குடும்பப் பெண்!! கணவன் நையப்புடைப்பு!!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில், நீண்டகாலமாக பிரச்சினை நிலவியுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அயலில் வசித்த அவரது அண்ணன் ஓடிச் சென்றுள்ளார். அங்கு, அவரது தங்கை தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டார்.
அவர் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண்ணே எரிகாயங்களுக்கு உள்ளானார்.
அவரை அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து எரித்ததாக அவரது அண்ணன் பொலிசாரிடம் தெரிவித்தார்.
தங்கையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடிச் சென்ற போது, தனது கணவனே தன்னை எரித்ததாக தங்கை தெரிவித்திருந்ததாக அவர் பொலிசாரிடம் கூறியிருந்தார்.
இதனால் கோபமடைநத மனைவியின் அண்ணன், கணவனை கடுமையாக தாக்கியுள்ளார். கணவனின் உடலில் பல பாகங்களில் எலும்பு உடைவு காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண்ணிடம் அச்சுவேலி பொலிசார் தகவல் பெற முனைந்த போது, தனக்குத்தானே தீமூட்டியதாக அந்த பெண் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதால், அவரிடம் முழுமையான தகவலை இதுவரை பெறவில்லையென அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்
கனடாவில் இருந்து வந்த சுரேஸ் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!
சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் திருமணம் செய்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவர் காணாமல் போன தினத்துக்கு முதல்நாள் அவரது நண்பர் அவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் விட்டதாக தெரிவிக்கின்றார்.
அவரது வீட்டில் சிசிடிவி கேமராவின் தேக்கவியல் (server) சாதனமும் காணாமல் போயுள்ளது. அவரது தலைக்கவசம் உடைந்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் காணாமல் போனதாக தெரியவில்லை என அவரது நண்பர் குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில் இது குறித்து அவரது நண்பர் 2024.08.24 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sunday, August 25, 2024
நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்ற யுவதி இரவு மரணம்!! தாயார் கூறும் பரபரப்பு வாக்குமூலம்!!
அலுவலக ஊழியர்களுடன் இரவு விருந்துக்கு சென்று வந்த 21 வயதான யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த இல.02, ஏ. வரகாபொல, அம்பேபுஸ்ஸ, டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதி நேற்று (25) காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ முன்னிலையில் கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் இடம்பெற்றது.
மரணம் தொடர்பான சாட்சிய விசாரணையின் போது அவரது தாயார் 54 வயதான ரோஹினி ஜயா மெனிகே தெரிவிக்கையில்,
“எனது சொந்த ஊர் கேகாலை, மொறந்தோட்டை, ஹப்புவிட்ட உடகம. பின்னர் கோடியாகும்புர பிந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் ராஜபக்ச ஆராச்சிலாவின் சிராஸ் ராஜபக்ஷவை திருமணம் செய்துகொண்டேன். அம்பேபுஸ்ஸ, மஹேன பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் தற்போது மரப்பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகள்கள்.
எனது மூத்த மகள் இப்பொழுது இறந்துள்ளார். மூத்த மகள் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோலங்கமுவ டட்லி சேனநாயக்கா பாடசாலையில் தோற்றியிருந்தார். பின்னர், மகள் தனியார் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படிக்கச் சென்றார். இதேவேளை நிட்டம்புவ தனியார் வங்கியொன்றில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இரண்டாவது மகள் கேகாலை பெண்கள் பாடசாலையில் படித்தார். பின்னர் குருநாகலில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார். குருநாகலில் தங்கிப் படித்தார். நானும் என் கணவரும் வியாபாரம் செய்கிறோம். மகளுக்கு எந்த நோயும் இல்லை. பிறந்த பிறகு, அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் (24ம் திகதி) காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் பார்ட்டிக்கு சென்றார். இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். வந்து உடலைக் கழுவிவிட்டு மாடிக்குச் சென்றார். நான் என் கணவருக்கு உணவை விநியோகித்தேன், என் மகளை சாப்பிடச் சொன்னேன். என் மகள் இரவில் குறைவாக சாப்பிடுவார். அப்போது மகள், அம்மா சாப்பிட முடியாது என்றார். நான் அவரை அதிகம் சாப்பிட வற்புறுத்தவில்லை. பிறகு, தான் போன பார்ட்டியைப் பற்றிச் சொல்ல அழைத்தாள். அந்த நேரத்தில் நான் தொலைபேசி அழைப்பில் இருந்தேன். பார்ட்டி பற்றி என் மகளிடம் கேட்க முடியவில்லை.
பிறகு தூங்கினோம். நேற்று (25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில், என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்தார், எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றார். பின்னர், மகளை விழ விடாமல் கணவர் பிடித்துள்ளார்.
நான் சென்று கேட்டை திறந்தேன். கணவர் மகளை காரில் ஏற்றி வரக்காபொல வைத்தியசாலைக்கு அழைத்து வந்தார். மகள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர் உட்பட மகளைக் காப்பாற்ற மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. மகள் இறந்து விட்டார். எனது மகளின் மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
உயிரிழந்த யுவதியின் தந்தையான 54 வயதான ராஜபக்ச ஆராச்சிலக ராஜபக்ஷவும் சாட்சியமளித்தார்.
பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி வைத்திய அதிகாரி வைத்தியர் பண்டாரகே சஞ்சய் மேற்கொண்டார். உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ அறிக்கைகள் கிடைக்கும் வரை மரணத்திற்கான காரணம் வெளிப்படையானது என வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று (26) வரக்காபொலவில் இடம்பெறவுள்ளன.
யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதாரப் பரிசோதகர்கள் நீரில் மூழ்கி பலி!!
சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த குளத்தில் நீராடச் சென்ற போதே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர்கள் என தெரியவருகிறது.
யாழில் பஸ்களில் பிரயாணம் செய்யும் மாணவிகளுக்கு கடும் பாலியல் தொல்லை!! நடப்பது என்ன?
யாழில் பஸ்களில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு காவாலிகள் திட்டமிட்ட ரீதியில் கடும் பாலி யல் தொல்லை கொடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மானிப்பாயில் உள்ள பிரபல மகளீர் பாடசாலைக்கு பஸ்களில் வரும் மாணவிகளுக்கு காவாலிகள் கடும் பாலி யல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக குறித்த பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நவீன மோட்டார் சைக்கிள்களில், காதுகளில் தோடு மற்றும் தலைகளுக்கு நிறப்பூச்சுகள் போன்றவற்றை பூசி வரும் ரவுடித்தனமான காவாலிகளும் நாகரீக உடைகளில் வரும் காவாலிகளும் மாணவிகளுக்கு இவ்வாறான பாலி யல் தொல்லைகளை கொடுத்து வருகின்றார்கள்.
மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்ட இடங்களில் விட்டுவிட்டு, பாடசாலைக்குச் செல்லும் நேரங்களைக் குறி வைத்து அரச மற்றும் தனியார பஸ்களில் ஏறும் ரவுடிகள் யாரையும் பொருட்படுத்தாது மாணவிகளுக்கு அருகில் சென்று சினிமாப்பாணியில் பாலி யல் சேட்டைகளை விட்டுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பஸ்களின் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மௌனமாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவிகள் தெரிவிக்கின்றார்கள்.
பாடசலை செல்லும் நேரங்கள் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் இதற்காக காத்திருந்து இவர்கள் செயற்படுவதாக தெரியவருகின்றது.
இதனால் குறித்த பாடசாலைக்கு பஸ்களில் செல்லும் மாணவிகள் பலர் கடும் அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் பாடசாலைத் தரப்பிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் பாடசாலைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் மற்றும் தமது உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நேரத்தில் இக் காவாலிகளின் கொடூரச் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டப்படுமா என்ற ஏக்கம் மாணவிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. இதே வேளை காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி, காரைநகர் -மானிப்பாய் – யாழ் வீதி போன்ற இடங்களால் யாழ் நகரப்பகுதிக்கு பஸ்களில் வரும் மாணவிகளுக்கும் இவ்வாறான பாலி யல் தொல்லைகளைக் காவாலிகள் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, August 24, 2024
மன்னார் சிந்துஜாவின் சர்ச்சைக்குரிய மரணம்: கணவர் எடுத்த தவறான முடிவு | Mannar Sindhuja S Husband Committed Suicide
Mannar Sri Lanka Sri Lankan Peoples
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தவறான முடிவு
26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
Mannar Sindhuja S Husband Committed Suicide
இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் ஆலயம் ஒன்றில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று(24.08.2024) நடைபெற்றுள்ளது.
மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்போது, பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 7 இலட்சம் வரை சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் | Corrupt Thugs Run The Country Before The Election
கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சிலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இந்த நாட்டில் உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் | Corrupt Thugs Run The Country Before The Election
சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தல்
கூட்டு முயற்சியில் ஈடுபட்டுவந்த இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வியாபாரங்களின் பங்குகளை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதற்கு நேரடியாக பங்களித்த பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் சிலரும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொண்டு வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்மை ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பாதகமான சூழலை எதிர்கொள்வதாக முன்கூட்டியே ஊகித்த காரணத்தினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் - சந்தேக நபர்கள் கைது | Tamil Boy Shot Dead In Canada Suspect Arrest
கனடாவில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட Pickering நகரில் வசிக்கும் 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 15, 16 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு
கடந்த ஜூலை மாதம் ஆறாம் திகதி ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இது தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், Oshawa, Stouffville நகரங்களைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? வெளியான நாசாவின் அறிவிப்பு
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
கடந்த சூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் என்ற விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றது.
அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
இருவரும் விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் விண்கலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் திட்டமிட்டப்படி 8 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை. கிட்டத்தட்ட 80 நாட்களாக இருவரும் விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர்.
நாசா அறிவிப்பு
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என கூறியுள்ளது.
அவர்கள் இருவரும் எலான் மஸ்கின் Space X நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பூமியை வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் இருவரும் விண்வெளியில் 8 மாதங்களாக தங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job