நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, August 24, 2024

கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் - சந்தேக நபர்கள் கைது | Tamil Boy Shot Dead In Canada Suspect Arrest


கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் - சந்தேக நபர்கள் கைது
கனடாவில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட Pickering நகரில் வசிக்கும் 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 15, 16 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு

கடந்த ஜூலை மாதம் ஆறாம் திகதி ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இது தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், Oshawa, Stouffville நகரங்களைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.  

0 comments:

Post a Comment