நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, August 23, 2024

இன்றும் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை | Rain And Wind Alert In Sri Lanka Today In Tamil


இன்றும் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya), காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை, வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)  வெளியிட்டுள்ள இன்றைய (24) தினத்திற்கான வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை

அந்தவகையில், ஊவா மாகாணத்திலும் அம்பாறை (Ampara) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Rain And Wind Alert In Sri Lanka Today In Tamil

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment