அர்ச்சுனாவுடன் மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த யூடியூப் பதிவாளர்களையும் கைது செய்ய உத்தரவு!!
வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூடியூப் சமூக வலைத்தள பதிவாளர்கள் உள்ளடங்களாக அத்துமீறி நுழைந்த அனைவரையும் கைது செய்ய மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் வெள்ளிக்கிழமை இரவு சாவக்கச்சேரி வைத்தியசாலையில் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதன் உள் நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதன் சனிக்கிழமை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த வைத்தியருடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதி இன்றி உள் நுழைந்தவர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மன்னார் நீதவான் காவல் துறையினருக்கு உத்தரவு பிரப்பித்துள்ளதகவும் தெரியவருகின்றது.
இதற்கு அமைய குறித்த வைத்தியரால் அழைத்து வரப்பட்ட மன்னாரை சேர்ந்த யூடியூப் சமூக வலைத்தள பதிவாளர் உள்ளடங்கலாக சிலரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது
0 comments:
Post a Comment