அரபு நாடு ஒன்றில் பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவரின் மனைவியுடன் பாடசாலை அதிபர் கள்ளத் தொடர்பு கொண்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீடு புகுந்து பாடசாலை அதிபரை தாக்க முற்பட்டதாகத் தெரியவருகின்றது. யாழ் கொக்குவில் பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதி பாடசாலையில் அதிபராக கடமையாற்றுபவர்,
அப் பாடசாலையின் கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் தாயாரின் வீட்டுக்கு பல தடவைகள் சென்று வந்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை அரபு நாடு ஒன்றில் தொழில் புரிவதாகத் தெரியவருகின்றது.
தாயாரின் இரு பிள்ளைகளும் அந்தப் பாடசாலையிலேயே கல்வி கற்று வருகின்றார்கள். மாணவியின் தாயாருக்கு குறித்த பாடசாலையில் கற்ற வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்கள் ஊடாக அதிபர் பல உதவிகளை செய்து வந்துள்ளார். அத்துடன் மாணவியின் வீட்டுக்கு அதிபர் பாடசாலை விட்டு செல்லும் போது பல தடவைகள் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந் நிலையிலேயே நேற்று அதிபர் மாணவியின் வீட்டில் நிற்கும் போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிபரை எதற்காக அங்கு வந்ததாக கூறி தாக்க முற்பட்டதாகத் தெரியவருகின்றது.
சேட்டு கழற்றப்பட்ட நிலையில் உள் பெனியனுடன் அதிபர் உள்ளே இருந்துள்ளார். இதன் காரணமாகவே அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிபரை தாக்க முற்பட்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பாக வீடியோ எடுத்துள்ளார்கள்.
இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அதிபர் அன்று இரவு சிவில் உடை தரித்த சில பொலிசாருடன் வந்து வீடியோ எடுத்த இளைஞனை மாணவியின் தாயார் மூலம் அடையாளப்படுத்தி அவனது வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தி வீடியோவை அழித்துள்ளதுடன் அவர்களை கைது செய்யப் போவதாக எச்சரித்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த மாணவியின் தாயாரின் வீட்டுக்குள் அதிபர் இருக்கும் போது புகுந்தவர்களில் சிலர் நிறை போதையில் இருந்ததாகவும் மாணவியின் தாயாருடன் ஏற்கனவே முரண்பட்டவர்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment