நல்லுர் பெரும் திருவிழா ஆரம்பமாகும் நிலையில் இராணுவச் சோதனைச் சாவடிகள் போல் நல்லூர் ஆலச்சூழலில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த வருட நல்லுார்த் திருவிழாவின் போது இவ்வாறு போடப்பட்ட வீதித்தடை காரணமான நெரிசலில் சிக்கி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்ப பல பக்தர்கள் படுகாயமடைந்தனர். மயக்கமடைந்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நாளையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமான முறையில் நடந்து செல்லவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மாற்றுத் திறனாளிகள் பாதைகளை உபயோகிக்க முடியாதவாறும் இராணுவச் சோதனைச் சாவடிகள் போன்ற அமைப்பையுடைய புதிய வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லுார் கோவில் எஜமான் என்று கூறிக் கொள்ளும் முட்டாள் சயந்தன் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளை சில காலம் செய்து வருகின்றார். கடந்த வருட நல்லூர் உற்சவத்தின் போது ஏற்பட்ட சனநெரிசலில் பக்தர்கள் பலர் மூச்சுத்தின்றல் உட்பட பல ஆபத்துக்களை எதிர்கொண்டதால் பின்னர் வீதித்தடைகள் தளர்த்தப்பட்டு முன்வீதியில் மாற்றுத்திறனாளிகள் பயண்படுத்தும் வகையில் பொலிஸார் வீதித் தடைகளை அப்புறப்படுத்தியிருந்தனர். எனினும் இம்முறை அதனை கணக்கில் எடுக்காது புதிதாக குறித்த வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுபோல் ஆலய பின்பக்கமாக பருத்தித்துறை வீதி முழுவதுமாக இம்முறை மறிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் போய்வருவதற்கான பாதை இல்லாமல் முற்றுமுழுதாகாக தடைசெய்யப்பட்டுள்ளது.
எதேச்சதிகார தனமாக வீதிகளில் இவ்வாறு தடைகளை ஏற்படுவதற்கு யாழ் மாநகரசபையும் துணைபோகுன்றதா என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் நலனில் அக்கறையுடன் யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் பொஸிஸார் செயற்படவேண்டும்.
0 comments:
Post a Comment