மன்னாரில் சிந்துஜாவைக் கொன்ற வைத்தியரை காப்பாற்ற முற்படும் கொழும்பு அமைச்சு!! சினிமா சீன் போடும் அர்ச்சுனா அங்கு அட்டகாசம் செய்வாரா?
மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜாவை அணுஅணுவாகக் கொன்றவர்களில் இரு தாதியர்கள் மற்றும் இரு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு பணித்தடைக் கடிதங்கள் அவர்களின் பதவி நியமனத்திற்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் சிந்துஜா கொலையில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைத்தியர் இதிலிருந்து தப்பவுள்ளார் எனவும் அதற்கு காரணம் வடக்கு மாகாண அமைச்சுக்கு அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை எனவும் அது மத்திய சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பதவி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மன்னார் வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் சிந்துஜாவின் மரணத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தியுள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டத்துடன் சேர்ந்து யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி செந்துாரனும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை சிந்துஜாவுக்கு நீதி கோரி நடாத்தியிருந்தார். செந்துாரன் அவ்வாறு உண்ணாவிதரம் இருக்கும் போது அர்ச்சுனா செந்துாரனை அந்த இடத்திலிருந்து துரத்துங்கள் என்று தனது பேஸ்புக்கில் விசுப்புளாத்தித்தனமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சிந்துஜாவின் மரணம் என்பது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக களத்தில் இறங்கிப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தி செயற்படுவது மிகவும் அவசியம். தான் மட்டுமே சிந்துஜாவுக்கு போராடுபவன் என அர்ச்சுனா நினைக்ககூடாது. சிந்துஜாவின் மரணத்தை வைத்து தன்னை பிரபலப்படுத்த அர்ச்சுனா முற்பட்டாரா?
என எண்ணத் தோன்றும் அளவுக்கு அர்ச்சுனாவின் வீடியோப் பதிவு உள்ளது. அர்ச்சுனா உண்மையில் பேஸ்புக்கில் சீன் போடுவதை விடுத்து நேரடியாக போய் சுகாதார அமைச்சுக்குள் சென்று நீதி கேட்பாராக இருந்தால் வரவேற்கத் தக்க விடயமாகும்.
அர்ச்சுனா அங்கு சென்று இவ்வாறு ஒரு போதும் செய்ய மாட்டார் என்றே கருதலாம். ஏனெனில் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் கூட தென்பகுதியில் ஒரு முகமும் வடபகுதியில் ஒரு முகமுமாகவே செயற்படுகின்றார்கள். அருச்சுனாவும் தற்போது தனது பேஸ்புக்கில் அரசியல்பதிவுகளை பகிரவே அதிகம் விரும்புகின்றார். ஆகவே அவரையும் ஒரு நடிகனாக மக்களுக்கு சீன் காட்ட முற்படுபவராக கருதலாம்.
0 comments:
Post a Comment