அண்ணா நான் சிந்துஜா கதைக்கிறன்..சொர்க்கத்தில் இருந்துதான் கதைக்கிறன்.. ”சிந்துவா? யார் அது?” என்று நீங்க கேட்காதீங்க… மன்னார் வைத்தியசாலையில் 8 மணி நேரமாக எந்தவித கவனிப்பும் இன்றி அணு அணுவாக எனது உயிர் பிரிந்ததை நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் முன்னாள் சாவகச்சேரி வைத்திய அதிகாரி அருச்சுனா அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதி உங்களது பேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளீர்கள். ஆகவே அர்ச்சுனா அண்ணா எதற்காக மன்னார் வந்தார் என்பதையும் ஏன் சிறைக்குச் சென்றார் என்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள்.
செந்துாரன் அண்ணா… நீங்கள் நான் இறந்ததற்காக நீங்கள் கடிதம் எழுதவில்லை. கடமை தவறிய மன்னார் வைத்தியசாலை வைத்தியர் உட்பட்ட ஊழியர்களை தட்டிக் கேட்டு கடிதம் எழுதவில்லை. நீங்கள் கடிதம் எழுதியது என்னைக் கொலை செய்த வைத்தியத்துறையினரின் தவறுகளை தட்டிக் கேட்க வந்த அருச்சுனாவுக்காக அவரை நக்கல் பண்ணுவது போல் ஒரு கடிதம் எழுதியுள்ளீர்கள். அந்த சந்தோசத்தில் நீங்கள் உங்கள் மனைவியுடன் உடல் உறவு கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருப்பீர்கள்.
நான் பெற்ற குழந்தை தாய்ப்பால் இல்லாது அழுகின்றது அண்ணா… சொர்க்கத்தில் எனக்கு இடம் தந்த கடவுள் என் குழந்தைக்கு நான் பால் கொடுப்பதை தடுத்து நிறுத்திவிட்டார். கடவுள்களும் அரச வைத்தியஅதிகாரிகள் சங்கத்தைப் போல் ஒரு மாபியாவா? நான் மன்னார் வைத்தியசாலையில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர்களும் மருத்துவத்துறையினரும் என்னை கவனிக்காது மரணிக்க வைத்துவிட்டார்கள். அவர்கள் இப்போது நன்றாக சாப்பிட்டு நித்திரை கொள்வார்கள். தற்போதும் வைத்தியசாலைக்கு சென்று வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.கைத் தொலைபேசிகளை பார்வையிட்டுக் கொண்டிருப்பார்கள். அண்ணா… என்னை மருத்துவக் கொலை செய்த பின்னர் இவ்வாறு சந்தோசமாக எந்தவித குற்ற உணர்வும் இல்லாது இருக்கும் உங்களது மருத்துவத்துறையினருக்கு எதிராக நீங்கள் பேஸ்புக்கிலாவது ஏதாவது பதிவை போட்டிருக்கலாம்தானே…. ஏன் அண்ணா உங்களுக்கு அவ்வாறு பதிவு போடும் அளவுக்காவது ஆண்மை இல்லையா?
ஆண்மை என்பது மருத்துவரீதியில் குழந்தை பெறுவது மட்டும் என்றுதான் நீங்கள் வாதாடுவீர்கள். ஆனால் ஆண்மை அதுவும் பேராண்மை என்பது என்ன என்பது தொடர்பாக வள்ளுவர் ஒரு குறளில் கூறியுள்ளார். அதை நான் இங்கு தருகின்றேன்..
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. – இதற்கான விளக்கம் நீங்கள் 12, 13 வயதில் கற்றிருப்பீர்கள்… அப்படி தெரியாது விட்டால் நானே சொல்கின்றேன்…
எந்தப் பலமான எதிரி என்றாலும் அவனுக்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று கருதப்படும். அந்த எதிரிக்கே ஒரு துன்பம் வரும்போது அதை தீர்ப்பதற்கு உதவி செய்வது ஆண்மையின் உச்சம் எனப்படும்.
அர்ச்சுனா மருத்துவர்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். பேஸ்புக்கில் வைத்தியர்களுக்கு எதிராக தாறுமாறாக கருத்து தெரிவித்திருக்கலாம். தன்னை பிரபலப்படுத்துவதற்காக பொய் கூறியிருக்கலாம்… தமிழ்த்தேசியப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போல் கருத்து தெரிவித்திருக்கலாம்… ஆனால் நான் இறந்தவுடன் எனக்கு நியாயம் தருவதற்காக ஓடி வந்தாரே…வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தால் சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்று தெரிந்தும் எனக்காக உள்ளே நுழைந்தாரே அவர் ஆண்மை உள்ளவர் அண்ணா…
பாரதப் போர் தொடர்பாக நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தப் போரில் விஷ்மர் என்ற மாவீரனை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அரவாணியான சிகண்டி என்பவள் அம்பு எய்து கொன்றது போல வைத்திய அரவாணிகள் போல் செயற்படும் உங்களது அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் விஷ்மர் போல் நின்ற அர்ச்சுனாவை நீதிமன்றில் சிகண்டிகளாக செயற்படும் சட்டத்தரணிகளைக் கொண்டு அடக்க முற்படுவது நியாயமா?
உங்களது பார்வையில் அல்லது வைத்தியத்துறையினது பார்வையில் அல்லது அவரது பேஸ்புக் மற்றும் ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்களை பார்த்த பொதுமக்களின் பார்வையில் அர்ச்சுனா ஒரு விளம்பரப்பிரியன், தவறான நடத்தையுடையவன், தமிழ்த்தேசியத்துக்கு எதிரான கருத்துக் கொண்டவன் என குறை கூறுவது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அவனைப் போல் ஏன் உங்களால் உங்களது வைத்தியத்துறையில் நடக்கும் தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது உள்ளது. அர்ச்சுனா அவ்வாறே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நீங்கள் ஏன் இதுவரைக்கும் வைத்தியத்துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் நீதிநடவடிக்கையில் இறங்காமல் இருக்கின்றீர்கள்.
நீங்கள் உங்களது பேஸ்புக் வீடியோவில் ஒரு சில வைத்தியர்களைத் தவிர ஏனைய வைத்தியர்கள் கடமையுணர்வு மிக்கவர்கள், மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்பவர்கள் என வீடியோப் பதிவாக விட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஒரு சில வைத்தியர்களின் கேவலமான செயற்பாட்டை தட்டிக் கேட்டக வக்கில்லாத நீங்கள் சிகண்டி போன்ற அரவாணிகள்தானே..
என்னைப் போல வைத்தியத்துறையினரின் கேவலமான செயற்பாட்டால் அநியாயமாக கொல்லப்பட்டு நீதிகிடைக்காமல் ஆனால் சொர்க்கத்தில் இருந்து தவிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் நீங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். செந்துாரன் அண்ணா… நீங்களோ அல்லது நாங்கள் நல்லவர்கள் என்று கூறும் வைத்தியர்களோ, வைத்தியத் தவறுகளை தட்டிக் கேட்காது வைத்தியத் தவறுகள் செய்த வைத்தியர்களைக் காப்பாற்றி வரும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வரை நீங்கள் ஒரு போதும் நல்லவர்கள் இல்லை…. நீங்கள் சுயநலவாதிகள். உங்களை நல்லவர்களாக மக்கள் முன் காட்டுவதற்கு பேஸ்புக்கில் பதிவிடுகின்றீர்க்ள். அந்தப் பதிவுகளை அப்பாவிகள் பலரும் உண்மை அறியாது பகிர்கின்றார்கள்.
உண்மையில் நீங்கள் எடுக்கும் சம்பளம் மற்றும் மேலதிக நேர பணம் போன்றவை எல்லாம் மக்களின் வரிப்பணம். அதாவது மக்கள் போட்ட பிச்சைக்காசு. அந்தப் பிச்சைக்காசை வைத்தே அந்தப் பிச்சை தந்த மக்களை கேவலமாக நீங்கள் நினைக்கின்றீர்கள். நீங்கள் பிரேதத்தை வைத்து உழைக்கும் கேவலமான செயற்பாட்டாளர்களுடன் கூட்டிணைந்து செயற்படுகின்றீர்கள்.
நீங்கள் நல்லவர் என மக்கள் முன் நிற்கத் துணிவிருந்தவராக இருந்தால் உடனடியாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவீர்களா? உங்களைப் போன்ற நல்ல வைத்தியர்கள் இருப்பதாக நீங்கள் பெருமைப்படுகின்றீர்களே.. ஆனால் நோயாளர்களை கொலை செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்கா சட்டத்தரணிகளுக்கு பெருமளவு பணத்தை கொட்டிக் கொடுத்து தவறு விடும் வைத்தியர்களைக் காப்பாற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் நீங்களும் உங்களைப் போன்ற நல்ல வைத்தியர்களும் இருப்பது முறையா?
0 comments:
Post a Comment