இரண்டு பதின்ம வயது மாணவிகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமம் கோதமிகம மகா வித்தியாலய அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி தரங்க சமீர சில்வா நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய அதிபர் சில காலமாக பாடசாலையின் இரண்டு பதின்ம வயது மாணவிகளை கடுமையாக வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
கதிர்காமம் காவல்துறையால் கைது
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கதிர்காமம் காவல்துறையினர் மற்றும் கொழும்பு சிறுவர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து அதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மீண்டும் விசாரணைக்கு
பின்னர், இது தொடர்பான வழக்கு நேற்று (28)திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய அதிபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பெற்றோர்கள் குழு மௌனப் போராட்டத்தை நடத்தியது.
0 comments:
Post a Comment