50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 6, 2024

மன்னார் வைத்தியசாலையில் நடந்த மற்றுமொரு கொடூரச் செயல்!! அம்பலப்படுத்துகின்றார் வைத்திய உயர் அதிகாரி விநோதன்!!


கிளிநொச்சி மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் விநோதன் தர்மராஜன் அவர்களின் பேஸ்புக் பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
அலட்சியத்தினால் ஏற்படும் மருத்துவ தவறுகள் (Medical Errors due to Negligence)
அல்லது
மன்னிக்க முடியாத மருத்துவ தவறுகள் …
இந்த ஆண்டு ஜனவரி மாதம் என்று நினைக்கின்றேன்….
மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டுவிட்டு அலுவலகம் வருகின்றேன் (RDHS office Mannar)
மேசையில் ஒரு கடிதம்; முறைபாட்டுக் கடிதம் …
மாவட்டப் பொதுவைத்தியசாலை மன்னாரில் குழந்தையை பிரசவித்த தாய் ஒருவரின் கணவர் இரண்டு பக்கங்களில் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
சாராம்சம் இதுதன் ..
அந்த தாய்க்கு பிரசவ வலியெடுத்து இரவு 8.30 மணி போல பிரசவ அறைக்கு குடும்பநல உத்தியோகத்தரொருவர் அவரை இடமாற்ற ஆயத்தமாகின்றார். அந்தவேளை அவரை விட வயது கூடிய இன்னொரு குடும்பநல உத்தியோகத்தர் பெரும் தொனியில் தாய்க்கும் கேட்ககூடியதாக “எடியே இவளை ஏன் இப்ப உள்ளே எடுக்கிறாய்? எங்கட எல்லோருடைய நித்திரையையும் குழப்பிக்கிபோடுவாள் … விடிய பார்க்கட்டும்” என்று கூறுகிறார்.
நல்லவேளை அந்த நேரம் எப்படியோ அந்த தாய் பிரசவ அறைக்கு எடுக்கப்பட்டு சுகப்பிரசவம் நிகழ்ந்து தாயும் சேயும் வீடு திரும்புகின்றனர்.
அந்த குடும்பநல உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அவர் இடம்மாற்ற உத்தரவில் தான் ஏற்கனவே இருந்தபோதும் அதனை நிறுத்த பல்வேறு திணைக்கள மட்ட உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகளை நாடினார். எதுவும் சரிவரவில்லை.
இந்த நேரம் நான் மகப்பேற்று வைத்திய நிபுணர்களிடம் கூறினேன் “இந்த விடுதியில் உள்ள சில பணியாளர்களின் நடத்தை மற்றும் மனப்பாங்கு இப்படியிருக்குமென்றால் இன்னும் சில மாதங்களில் இங்கு அநியாயமான ஒரு தாயின் உயிரிழப்பு ஏற்படுமென்று..
அன்று கூறியது இன்று நடந்துள்ளது.
சித்திரையில் உருவான நச்சு சூழ்நிலை ….
சித்திரையில் சிரேஷ்ட வைத்திய நிர்வாகிகளுக்கான நியமனம் என்ற பெயரில் எனக்கு வந்த இடமாற்றத்தில் நான் கிளிநொச்சி செல்ல, என்னை பிரதியிட நியமனம் செய்யப்பட்டவர் விருப்பமில்லாமலே மன்னாருக்கு வந்து சேர்ந்தார். (ஒருவகையில் கேகாலையில் இருந்து ஒரே நாளில் துரத்திவிடப்பட்டார்). அவருடைய பாவப்பட்ட சுயவிபரக்கோவை அவர் சுயசரிதங்களை சொல்லும்.
வந்தவரை மூளைச்சலவை செய்த பெருமைக்குரிய எமது அலுவலர்கள் சிலரும் முன்னைய தற்காலிக மாகாண சுகாதார VIP ஒருவரும் மன்னார் சுகாதாரத் துறையை எந்த வகையில் நிர்மூலமாக்கலாமோ அவற்றையெல்லாம் அவரை கொண்டு செய்ய வைத்தனர்.
இதில்
1. இறுதி நிலை மற்றும் படுக்கை நிலை நோயாளர்களுக்கு அவர்களின் இல்லங்களில் வழங்கப்பட்டு வந்த சேவை எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்பட ஆறு வரையான ஏழை நோயாளர்கள் இருந்து போயினர். அவர்களில் இருவர் இது தொடர்பில் என்னிடம் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்திருந்தனர். (இந்த சேவை என்னால் வழங்கப்பட்ட அழுத்தத்தினால்பின்னர் மீள அரம்பிக்கப்பட்டது.)
2. பொதுச் சுகாதார, உளநல சேவைகளுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்கள், ஆடம்பர வாகனங்களாக்கப்பட்டு மாகாணத்திற்கு வெளியில் சுற்றுலா செல்ல பயன்படுத்தப்பட்டது. பழுதடைந்த வாகனங்கள் திருத்தப்படவில்லை.
இதனால் இலங்கையில் சிறந்த பொதுச்சுகாதார சேவையை வழங்கும் மாவட்டமாக கோவிட் பெருந்தொற்று மற்றும் அதற்கு பின்னரும் பெயரெடுத்து அதற்குப் பரிசாக அண்மையில் கூட இரு Double Cab வண்டிகளை யுனிசெப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட மன்னார் பொதுச்சுகாதாரத்துறையின் பணிகள் தேக்கமடைந்தன.
3. சிறப்பாக இதய சுத்தியுடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு தண்டனை இடம்மாற்றம் வழங்கப்பட்டது (இது பின்னர் என்னால் தடுத்து நிறுத்தப் பட்டது). வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட குடும்பநல சுகாதார உத்தியோகர்கள் சிலர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் களப்பணிகளில் இருந்து விடுபட்டு மீண்டும் சுகப்பணியுள்ள தமது முன்னைய நிலையங்களுக்கு இடம்மாற்றத்தினை பெற்றுக்கொண்டனர். (இவர்களில் இடமாற்றத்தினை ஏற்கமறுத்து போலி மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்து விடுமுறையில் நின்று பின்னர் அதனையும் சமர்பிக்காமல் பதவி வெறிதாக்கப்பட்ட ஒருவரும் உள்ளார் என்பது இங்கு வேடிக்கையானது)
ஒரு சில மேலதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களினால் குளிர் விட்டுப்போன உணர்வுகள் எவையுமற்ற ஜடங்கள் போன்ற விரல் விட்டு எண்ணகூடிய ஒரு சில மருத்துவப்பணியாளர்களின் அலட்சியத்தினால் சிந்துஜா என்ற இளந்தாயின் அவல மரணம் நிகழ்துள்ளது.
சம்பவம்
கிடைத்த தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை. அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வரை எந்தவொரு இடத்திலும் தாமதம் ஏற்படவில்லை.
ஆனால் வைத்தியசாலையில் அனுமதித்த முதல் நிமிடம் முதல் குருதிப்பெருக்குடன் வரும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த தாய்க்கு பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் எந்தளவு தூரம் பின்பற்றப்பட்டது என்பது தொடர்பில் பெரும் கரிசனையுள்ளது.(இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கையை தரமுடியுமா என்று எவரும் கேட்டு காமெடி பண்ணவேண்டாம்; அந்த நடைமுறை தான் எமக்கு மருத்துவ, தாதிய கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றது).
1. குருதிப்பெருக்குடன் வந்த தாய் முதலில் அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும்; அங்கு இடமில்லை என்றால் அனுமதிக்கப்பட்டவுடன் விடுதி on call மருத்துவருக்கு OPD யில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு அது பின்பற்றப்பட்டதா என்பது முதல் கேள்வி
2. விடுதியில் இவ்வாறான தீவிர நிலைமையுடைய தாய்மார் தீவிர கண்காணிப்பு பிரிவில் (High Dependency Unit) வைக்கப்பட்டு தாதிய, குடும்பநல உத்தியோகதர்களால் 15 நிமிடத்திற்கு ஒருதடவை கண்காணிக்கப்பட வேண்டும். (இதற்காக தான் 26 மில்லியன் ரூபா செலவில் இந்த மகப்பேற்று விடுதி கடந்த வருடம் புனரமைக்கப்பட்டு , அனைத்து நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன மன்னார் – ஐக்கிய இராச்சிய நலன்புரி அமைப்பின் நிதிப்பங்களிப்பில் வழங்கிவைக்கப்பட்டது.)
இதுவும் ஒழுங்காக நடைபெற்றதா என்பது அடுத்த கேள்வி.
விடுதி on call வைத்தியர் அழைத்தும் வரவில்லை என்றால் “பரவாயில்லை நாங்கள் நித்திரைக்கு செல்வோம். பொழுது விடிய பார்த்துக்கொள்ளலாம்” என்று தாதிய, குடும்பநல உத்தியோகத்தர்கள் வாளாவிருக்க முடியாது.
உடனையாக இதுபற்றி இரவு on call தாதிய சகோதரிக்கு அவர்கள் அறிவிக்கவேண்டும். அந்த தாதிய சகோதரி இதனை உடனடியாக OPD மருத்துவருக்கு அறிவிக்கவேண்டும். இரவு OPD மருத்துவர் தான் அந்த நேரத்தில் வைத்தியசாலை பணிப்பாளருமாவார்.
அவருடைய பரிந்துரையுடன் அந்த தாய்க்கு இரண்டு கரங்களிலும் குருதியையும், குருதிநாள திரவங்களையும் வழங்கக்கூடிய Wide Bore Cannula களை நிலைநிறுத்தி, உடனடியாக இரத்தமேற்றுவதற்கு முன்னர் செய்யவேண்டிய Blood grouping and DT பரிசோதனைக்குரிய குருதி மாதிரியை எடுத்து குருதி வங்கிக்கு அனுப்பிவிட்டு குருதிநாள திரவங்களிலொன்றை OPD மருத்துவரின் பரிந்துரையுடன் தாய்க்கு செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
இந்த இடைவெளியில் OPD மருத்துவர் நிலைமையின் விபரீதத்தை மகப்பேற்று வைத்திய நிபுணருக்கு அறிவிக்கவேண்டும். Cannula செலுத்துவதில் தாதிக்கு ஏதாவது சிக்கல் நிலைமை இருந்தால் அந்த நேரத்தில் on call மருத்துவர் இல்லாதவிடத்து உணர்வழியியல் மருத்துவ அணியினரை OPD மருத்துவர் மூலம் அழைக்க வேண்டும்.
எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உணர்வழியியல் மருத்துவ அணியின் விசேட வைத்திய நிபுணர் உள்ளடங்கலாக, அந்த தாய் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முழு ஆயத்த நிலையில் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு தகவல் செல்லவில்லை. அவர்கள் மறுநாள் காலை ஏழு மணியின் பின்னரே அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் அந்த தாய் மீள் ஈடு செய்யமுடியாதளவு குருதியை இழந்து மயக்கமடைந்து Peripheral Shutdown நிலைக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு அங்கே செய்துகொள்ள பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.
எனவே Emergency escalation protocol activation இலும் பிரச்சனைகள் உள்ளன.
3. குருதிப்பெருக்குடன் வந்த தாய் பலதடவைகள் குளியலறைக்கு கழுவிவிட்டு வருமாறு நடத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் பிழையான ஒரு நடைமுறை. அவரை Wheel chair இல் கொண்டு செல்ல அங்கு சுகாதாரப்பணி உதவியாளர்கள் எவரும் கடமையில் இருக்கவில்லையா என்பது இங்கு மிகப்பெரும் கேள்வி.
ஆக மொத்தத்தில் மன்னார் மாவட்ட மருத்துவ நிர்வாகி கூறுவது போல “ஒரு மருத்தவரின் அலட்சியதினால் தான் மரணம் நிகழ்ந்தது, மாவட்டப் பொது வைத்தியசாலையில் மருத்துவர்கள் இருவாரம் வேலைசெய்துவிட்டு இருவாரம் வீட்டில் நிற்கின்றார்கள்” (அவர் மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்கிறார் என்று எவரும் கேட்டு தயவுசெய்து எவரும் அவரைச் சங்கடப்படுத்த வேண்டாம் ) என்பதை நம்பி அந்த மருத்துவருடன் இந்த விடயத்தை கடந்து சென்றால் இது போன்ற மரணங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.
திணைக்கள விசாரணை பயன்தருமா?
ஒருவேளை நியாயமாக திணைக்கள விசாரணை இடம்பெற்றால் தவறு நிகழ்ந்த இடத்தில் கடமையில் இருந்த ஒருசிலர் தண்டிக்கப்படலாம். ஆனால் தவறுக்கு பொறுப்பு கூறவேண்டிய மருத்துவ நிர்வாகிகள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் இவ்வாறான தவறுகள், அலட்சியங்கள் தொடர்ந்து இடம்பெறும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, குறிப்பாக அந்த பச்சிளம் குழந்தைக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. அதற்குரிய ஏற்பாடுகள் திணைக்கள விசாரணை நடைமுறைகளில் இல்லை.
எனவே அநியாயமாக இறந்த சிந்துஜாவிற்கு நீதி கிடைக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவும் சட்ட நடவடிக்கையே உகந்தது.
என்னால் எவ்வாறு உதவ முடியும்?
22 பேர் அணியோ அல்லது மன்னாரையோ வேறு வடபுல மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த சட்டத்தரணிகள் அணியோ தன்னார்வத்துடன் வழக்கொன்றை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்குரிய மருத்துவத் துறைசார் தொழிநுட்ப ஆலோசனைகளை எந்தவிதமான கட்டணமுமின்றி வழங்க நான் தயார். அதற்காக 0718474361 என்ற Wharsapp இலக்கம் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளமுடியும்.
அலட்சியதினால் ஏற்படும் மருத்துவத் தவறுகள் தண்டனைக்குரியவை.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job