அரச சேவையின் ஆரம்ப சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற “புலுவன் சிறிலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, “இந்த நாட்டு மக்கள் படும் துன்பம் எங்களுக்கு தெரியும். நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர வற் வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது.
ஆரம்ப சம்பளம்
நாங்கள் அதை விருப்பத்துடன் செய்யவில்லை. அந்த முடிவுகளை தயக்கத்துடன் எடுக்க வேண்டியிருந்தது. அது நாட்டின் பொருளாதாரத்திற்கு நிவாரணம் தரும் என்பதை அறிந்தோம்.
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களை நாங்கள் மறக்கவில்லை. 2024 ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கினோம். 10,000 ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக ஆக்குவதன் மூலம், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25,000 ரூபாவாகவும், அரச சேவையின் ஆரம்ப சம்பளம் 24% இனால் அதிகரிக்கப்பட்டு, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டமொன்று உருவாக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment