நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, August 5, 2024

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை: மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் | Heavy Rain Thunder Lighting Jaffna North In Tamil


வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை: மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்
வெப்பச் சலனம் மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும் (14.08.2024)  வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த தகவலை யாழ்ப்பாண பல்கலைக்கழக (jaffna university) புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ளார்.

உள் நிலப்பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பச் சலன செயற்பாடு

அத்துடன், ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது முல்லைத்தீவு, வவுனியா (vavuniya), மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

Heavy Rain Thunder Lighting Jaffna North In Tamil

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் மற்றும் சிறுதானிய பயிர்களை அறுவடை செய்பவர்கள் மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

மேலும் வெப்பச் சலன செயற்பாடு காரணமாக இந்த மழை கிடைக்கும் என்பதனால் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என சிரேஷ்ட விரிவுரையாளர் எச்சரித்துள்ளார்.

பலத்த மின்னல் எச்சரிக்கை

இதேவேளை, பலத்த மின்னல் எச்சரிக்கை குறித்த அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job