மலேசியாவில் விளையாட்டிற்காக 4 வயது சிறுவனை அவரது வாஷிங் மிஷினுள் அடைத்து வைத்தது, அது வினையில் போய் முடிந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மலேசியாவின் Selangor பகுதியில் உள்ள Taman Sentosa-வில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய launderette கடை உள்ளது.
அங்கு தாய் அவரது நான்கு வயது மகன் மற்றும் மாமா ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது மாமா விளையாட்டிற்காக சிறுவனை அங்கிருக்கும் வாஷிங் மிஷினிள் வைத்து அடைத்துள்ளார். ஆனால் அந்த விளையாட்டே வினையாக போயுள்ளது.
சிறுவனை அதன் பின் வெளியில் எடுக்க முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மாமா, மற்றும் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அங்கு வந்து சிறுவனை காப்பாற்ற போராடியுள்ளனர்.
அதில் ஒரு நபர் சாதுர்யமாக செயல்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் அவரின் மாமாவிற்கு 20 வயது இருக்கும் எனவும், சிறுவனின் அம்மாவை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக விளையாட்டிற்கு செய்தது, இப்படி நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் launderette என்பது நாம் துவைக்க நினைக்கும் துணிகளை எடுத்துச் சென்று, அங்கிருக்கும் வாஷிங் மிஷினை பயன்படுத்தி துவைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் அதற்கான பணம் செலுத்த வேண்டும்.
0 comments:
Post a Comment