ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது நிறுவன ஊழியர்கள் இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.50 ஆயிரம் பரிசு தருவதாக அறிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் ஒரு புதுவிதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தனது நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அந்த ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பானது உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவை ஜப்பான் நாட்டு மக்களின் உடல் நலம் கருதி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு மக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் மறுநாள் காலையில் அவர்களால் பணியில் கவனத்துடன் ஈடுபடமுடியவில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் இந்தத் திட்டத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக பிரத்யேகமாக ஆப் ஒன்று வடிவமைத்துள்ளனர். அந்த ஆப் மூலம் ஊழியர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிடப்படுகிறது. அதற்கு பின்னர் ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment