நாட்டின் பல இடங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, 14 ஆயிரத்து 175 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவை மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களினால் 9 பேர் மரணித்துள்ளனர்.
அசாதாரண காலநிலையால் ஒருவர் காணாமல் போய் இருப்பதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 2 ஆயிரத்து 611 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்த நிலையில், அவர்கள் 28 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் விசேட அதிகாரிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 1000க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் எதிர்வரும் சனிக்கிழமைக்குப் பின்னர் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், களுகங்தைகயும், ஜின் கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளன.
தெதுரு ஓய, பொல்கொல்ல லக்ஷபான மற்றும் ராஜங்கனை ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் அவற்றின் வான் காதவுக்ள திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் களுத்துறை, பதுளை, கேகாலை, காலி மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.
தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், உடனடியாக வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
எதிர்வரும் 24 மணி நேரத்துக்குள் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில், வலல்லாவிட்ட, புலத்சிங்கள, அகலவத்தை, மதுகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தின் ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் காலி மாவட்டத்தின் நெலுவை, எல்பிட்டி, தவலம, நியாகம, நாகொட, யக்கலமுல்ல, பெத்தேகம ஆகிய இடங்களிலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரத்தினபுரியில் கலவானை மற்றும் அயாகம பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச செயலகப்பிரிவிலும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தொட்ட மற்றும் ருவான்வெல்ல மாவட்ட செயலகப் பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment