எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய,
இது தொடர்பான கூட்டம் நிதியமைச்சில் இடம்பெறவுள்ளது.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மாற்றத்திற்கு அமைய, எரிபொருள் விலை சீராக்கல் குழு கூடி, மாதத்திற்கு ஒரு முறை எரிபொருட்களின் விலைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ளும்.
எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கப்பட்டதன் பின்னர், இரு முறை எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு தடவையும் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இறுதியாக கடந்த மாதம் 10 ஆம் திகதி எரிபொருட்களில் விலைகள் சீர் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், அதன்போது பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 4 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment