கொழும்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பொலிஸார் கண்முடிதனமாக தடியடி நடத்தியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி இன்று கொழும்பு - காலி முகத்திடலில் காலை முதல் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் அமைதியாக முறையில் இளைஞர்கள் பாரிய அர்பாட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொலிஸார் இளைஞர்கள் மீது பெட்டனில் தாக்குதல் மேற்கொண்டதால் குறித்த ஆர்பாட்டம் 6.00 மணியளவில் கலைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் அச்சமயம் அரசியலை புறம் தள்ளி முற்று முழுதாக சமூக நோக்கம் கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சில அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய நபர்கள் கலந்துகொண்டிருந்தும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொலிஸார் விதித்த கட்டுப்பாடுகளுடன் மிகவும் அமைதியான முறையில் நேற்று போராட்ட குழு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், உரிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டதாகவும் தெரியவந்துயிருந்தனர்.
இந்நிலையில் அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய நபர்களே மாலை நேரம் வரையில் இருந்து, இந்த போராட்டத்தை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த நபர்களே எல்லை மீறி செயற்பட்டதாகவும், இதன் காரணமாகவே பொலிஸார் நீர் தாரை மற்றும் தடியடி நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment