யாழ்ப்பாணத்தில் நிலவிய கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சார சபை காரியாலயம் முன்பாக நின்ற பாரிய மரமொன்று வீதிக்கு குறுக்காக சரிந்துவீழ்ந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன். மின் இணைப்பு கம்பிகள் , தொலைபேசி இணைப்பு வயர்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல் தெரிவித்து மீட்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து சாலையை சீரமைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment