நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, October 8, 2018

வங்காள விரிகுடாவின் சீற்றம் தமிழர்களின் தலைநகர் ஊடாக!


வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல குழப்பநிலையானது குறைந்த

   
       
   
  காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி திருகோணமலையில் இருந்து 950 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் நிலவும் மழையுடனான காலநிலையில் மேலும் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , வடமேல் , மத்திய , சப்ரகமுவ மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு 150 மில்லிமீற்றர் அளவில்

   
       
   
  கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment