17 வயதுடைய சகோதரிக்கு அச்சம் கொண்டு கோழி கூண்டிற்குள் வாழ்க்கையை கடத்திய 29 வயதுடைய சகோதரன்.
இந்த சம்பவம் கலேவெல பகுதியில் பதிவாகியுள்ளது.
கலேவெல - இப்பன்கட்டுவ பகுதியில் வசிக்கும் குறித்த சகோதரர்கள் இருவரும் பிறவியிலேயே விசேட தேவையுடையவர்கள்.
சிறு பராயம் முதல் இருவரும் சண்டை பிடித்துக்கொள்வதால் இருவரையும் ஓரிடத்தில் வசிக்க செய்ய முடியாத நிலையில் பெற்றோர் பாரிய சவால்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
17 வயதுடைய சகோதரி மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, 29 வயதுடைய சகோதரனும் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் தனிமையில் ஓரிடத்தில் விட்டு சென்றால் இருவரும் சண்டை பிடித்துக்கொள்வதோடு மனநோயினால் பாதிக்கப்பட்ட சகோதரி சகோதரனை கடுமையாக தாக்குவதால் அவர் வீட்டை விட்டு பல தடவைகள் தப்பிச்சென்று காணாமல் போயுள்ளார் என அவர்களின் பெற்றோர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தனர்.
அத்துடன், இருவரையும் எவ்வாறாயினும் குணப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் தாய்,
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று பணிப்பெண்ணாகவும் இரு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
எனினும் தாய் சம்பாதித்த பணத்தினை கொண்டு அவர்களை குணப்படுத்த முடியாமையால் மகனை வீட்டிற்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக அறையில் அடைத்து விட்டு நாளாந்தம் கூலி வேலைக்கு செல்வதாகவும் தெரிவிக்கின்றார்.
இருவருக்காகவும் தாயும் ஒரு தினத்திலும் தந்தை பிரிதொரு தினத்திலும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

0 comments:
Post a Comment