நடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை மகிழூர்தியில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஆனால், மகிழூர்தியை வேறு பக்கம் செலுத்த சொன்ன அவர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு வைத்திருந்த சூட்கேஸை புதரில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த சாரதி சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த இடத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை செய்த போது, சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் இருந்தது கண்டு காவற்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்காணிப்பு கெமரா மூலம் சோதனை செய்ததில், சூட்கேஸை வீசி விட்டு சென்ற அந்த வாலிபர், சிறிது தூரம் நடந்து சென்று ஒரு முச்சக்கரவண்டியில் ஏறிச்சென்ற வாலிபர், அதன்பின் வேறொரு மகிழூர்தியில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.
காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரின் பெயர் முசாமில் சையத் என்ற கல்லூரி வாலிபர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவற்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த மாணவனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏன், கொலை செய்தேன் என அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்... "இருவரும் சமூகவலைதளத்தில் அறிமுகமாகி பழகி வந்ததாகவும்.
இதனால் அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்ததாகவும் கூறியுள்ளார் சையத் .
வீட்டில் யாரும் இல்லாததால், மான்சியை உறவுக்கு அழைத்ததாகவும்... அவர் மறுத்ததால், கோபம் வந்தது, இதனால் அவரை பக்கத்தில் இருந்த மர ஸ்டூலை எடுத்து ஓங்கி மண்டையில் அடித்தேன் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அவர் வெகு நேரம் ஆகியும் கண் திறக்காததால்... அம்மா வந்தால் என்ன சொல்வது என புரியாமல் கயிற்றால் அவருடைய கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தேன்.
பின் அவருடைய பிணத்தை பெரிய சூட்கேசில் வைத்து நடு வீதியில் வீசியதாக கூறியுள்ளார்.
மேலும் இப்போது தவறை உணர்ந்து விட்டதாகவும்... உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அப்படி நடந்து கொண்டதாகவும், குறிப்பாக அம்மாவிற்கு பயந்து மட்டுமே அவரை கொலை செய்யும் வரை துணித்ததாக கதறியபடி காவற்துறையில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் சையத்.
0 comments:
Post a Comment