மண்டான் முன்பள்ளி விளையாட்டு விழாவில்பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தகரவெட்டி பிரதேசசபை தவிசாளர் அந்தநிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டதை திரிபுபடுத்தி இன்று காலையில் ஓர் கட்சியின் இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருந்தது!
முன்பள்ளி விளையாட்டு நிகழ்விற்குதவிசாளர் பிரதம விருந்தினராகஅழைக்கப்பட்டிருந்தார், அவர் சொல்லாமல்கொள்ளாமல் நிகழ்விற்கு செல்லாமல்விட்டதால் சிறார்கள் நீண்டநேரம்காத்திருந்தார்கள், இறுதியாக, நிகழ்விற்குசற்று தாமதமாக சென்ற வடமாகாணசபைஉறுப்பினர் தர்மலிங்கமே பிரதமவிருந்தினராக கலந்து கொண்டிருந்தார்என்று குறிப்பிட்டிருந்தது
இந்த செய்தியை கரவெட்டிபிரதேசசபை தவிசாளர் உறுதிசெய்துள்ளார். நிகழ்விற்கு அழைக்கப்பட்டதைஉறுதிசெய்ததுடன், “புறக்கணித்தேன்“ என்றும் தவிசாளர் தனது மறுப்பில்குறிப்பிட்டுள்ளார்.
தவிசாளரின் மறுப்பறிக்கையில் –
“மண்டான் முன்பள்ளி நிர்வாகம் என்னைபிரதம விருந்தினராக அழைப்பதற்குஅணுகியது உண்மை. அதற்கு நான்சம்மதித்ததும் உண்மை. என்னை பிரதமவிருந்தினராக அழைக்க வந்த நிர்வாகத்திடம்அந்த வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில்வெற்றிபெற்ற உறுப்பினரையும் அழைக்கும்படிகேட்டிருந்தேன். மீண்டும் அழைப்பிதழ்வழங்க அந்த நிர்வாகம் வந்த போது, வட்டாரஉறுப்பினரின் பெயர் இல்லாததை பார்த்து, நான் அங்கு வருவதாக இருந்தால் வட்டாரஉறுப்பினர் அங்கே அழைக்கப்பட வேண்டும்என உறுதியாக கூறியிருந்தேன். இதனைமுன்பள்ளி நிர்வாகம் புறக்கணித்த நிலையில்நான் அந்த விளையாட்டுப் போட்டியைபுறக்கணித்தேன்.
மண்டான் முன்பள்ளி நிர்வாகத்தின் ஒரு சிலர்வட்டார தமிழரசு கட்சி உறுப்பினரின்வெற்றியை பொறுக்காத மாற்று ஒட்டுக்குழுவை சார்ந்தவர்கள். அவர்கள் அந்தவட்டார மக்களால் தெரிவு செய்யப்பட்டஉறுப்பினரை தமது அரசியல்வங்குரோத்துக்காக புறக்கணித்தார்கள். அத்துடன் சாதி உணர்வை தூண்டி அதில்குளிர்காய முயற்சிக்கிறார்கள்.“ என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
சாதிக் காரணங்களிற்காக அல்லாமல், கட்சிக்காரணங்களிற்காக மட்டுமேநிகழ்வில் கலந்துகொள்ளாமல் விட்டேன்என த.ஐங்கரனின் மறுப்பில்குறிப்பிடப்பட்டிருந்தது.
விடயம் இவ்வாறு இருக்கையில் பொறுப்பற்ற கட்சியின் இணையத்தளம் மக்கள் மத்தியில் சாதிப்பிரச்சனையை உண்டு பண்ணும் விதமாக செய்தியை திருபுபடுத்தி மக்களை திசை திருப்பி தனது கட்சிக்கு விசுவாசமாக செய்திகளை வெளியிடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்!
0 comments:
Post a Comment