“இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள்.
எனினும், நடந்தது வேறு. புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.”
இவ்வாறு பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பினால் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன் போதே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் பரிந்துரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஆதரவளித்தவர்கள் எமது நாட்டுப் நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றனர்.
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள்.
எனினும், நடந்தது வேறு. புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment