மட்டக்களப்பு - மலரவன் வெல்லாவெளி மாலையர்கட்டு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை ஆரம்பிக்கும் போது, 31ஆம் கிராம பகுதியில் இருந்து வருகை தந்த சில சகோதர இனத்தவரும் அவர்களுடன் வருகை தந்த மூன்று பௌத்த துறவிகளும் மேற்படி செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டம் என்று எச்சரித்துள்ளனர்.
மீறி செயற்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கிராம சேவகரையும் எச்சரித்துள்ளனர்.
மேலும், இதுவரை நட்ட விதைகளை அகற்றுமாறும், இனியும் விதை நடப்பட்டால் தங்களை வெட்டி புதைப்போம் என்றும் உரத்த தொணியில் வற்புறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மாவட்ட செயலகம்,பனை அபிவிருத்திச் சபை, மத்திய நீர்பாசன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன வனரோபா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து சட்ட ரீதியாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி, நேற்றைய தினம் மட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிறுந்தமை இங்கு சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment