நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 25, 2018

மாகாண சபை தேர்தலால் கவலையில் பிரத்தானியா


ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

வட மாகாண சபையின் ஆயுட்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபையின் அதிகாரங்கள் அனைத்தும் வட. மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2013 செப்டெம்பர் 25ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது. இந்த நிலையில், சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒன்பது மாகாணசபைகளில் ஆறாவது மாகாண சபையின் பதவிக்காலமும், புதிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் முடிவுக்கு வருவதையிட்டு, பலர் ஏமாற்றமடைவார்கள் எனவும், சரியான நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது, ஜனநாயகத்தின் பெறுமானங்களுக்கு முக்கியமானது எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job