நான்கு வயதுச் சிறுவனுக்கு , தன்னுடைய சிற்றன்னையின் இதயபூர்வமான திருமணப் பிரமாணங்களைக் கேட்டதும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அன்று ஒரு நாள் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு திருமணம் நடந்தது. அதன் தனித்துவம் மேலும் சிறப்பாக இருந்ததற்குக் காரணம், அந்த மாப்பிள்ளையின் முதல் மனைவிக்குப் பிறந்த 4 வயதுப் பையனும் அதில் பங்கு கொண்டதுதான்.
புதிய மணமகள் தன் திருமணத்தில் சொல்லப்படும் வாக்குறுதிகளை அந்தப் பையனுக்கு முன்னால் சொன்னதுதான். சுற்றியிருந்த வருகையாளர்கள் யாவரும் வாயை விட்டு அழுது விட்டார்கள். அந்தப் பையன் மீது அவர்கள் பொழிந்த அன்பினால் அப்படி அழுது விட்டார்கள்.
ஜோஷ் என்ற மணமகனும், எமிலி நெவில்லி என்ற மணமகளும் அமெரிக்க கடற்படையில் கடந்த இரு வருடங்களாகவே சேர்ந்து பழகி வந்தனர். அவர்களுடைய அந்த திருமணம் நடப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்பே அவர்கள் நட்பு வளர்ந்திருந்தது. எமிலியும் அந்த சிறுவன் மீது அளவற்ற பற்று கொண்டு விட்டாள். தனது திருமண விழாவில் அவனையும் ஒரு முக்கிய அங்கமாகச் சேர்த்துக் கொண்டிருந்தாள்.
மேலே கண்ட வீடியோவில் எமிலி தன் திருமண வாக்குறுதிகளை அந்தப் பையனுக்கு முன் வாசிக்கிறாள். அவள் கண்கள் கண்ணீரால் குளமாகியது. அந்தப் பையனும் அழுதான். எமிலியை மனமாறத் தழுவிக் கொண்டான். “நீ நீடுழி வாழ வேண்டும். நலமாக நீண்ட நாள் வாழ்ந்து சிறந்த மகனாக வாழ கடுமையாக முயற்சிக்க வேண்டும்" என்று வாழ்த்தினாள்.
இருவருமே உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள். அவன் நல்ல மனிதனாக வளர்வதற்கு தன்னால் முடிந்தவற்றைச் செய்வாள் என்று உறுதி கொண்டாள். அதற்குக் காரணம் அவள் அவனை மிகவும் நேசித்தாள்.
அவன் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவனாகவும், மிடுக்குடன் நடந்துகொள்பவனாகவும் அழகாகவும் இருந்ததைப் புகழ்ந்தாள். அவன் எவருடனும் அன்புடன் நடந்து கொண்டான். “நான் உனக்கு வாழ்க்கையில் பெரியதாக பரிசொன்றும் கொடுத்து விடவில்லை; ஆனால் என் வாழ்க்கை உன்னையே எனக்கு பரிசாக அளித்திருக்கிறது”
என்ற அழகிய வாக்கியத்தைச் சொன்னாள்.
சுற்றியிருந்த வருகையாளர்களும் அழுதார்கள். எமிலி பையனிடம் குனிந்து இறுகக் கட்டிக் கொண்டு விட்டு, அவனை தன் மாமாவிடம் செல்லச் சொன்னாள். மீதமுள்ள விழா நடக்க உதவினாள். தன் வார்த்தைகளின் பிரகாரம் அவனுடன் இருந்த அவளுடைய உறவு மிகவும் லட்சியகரமாக இருந்தது. புதிய கணவருக்கு மனைவியாக மட்டுமல்லாமல், அந்தப் பையனுடைய சிறந்த தாயாகவும் இருக்க ஒப்புக் கொண்டாள்.
இது கேஜுக்கு பேராச்சரியத்தைக் கொடுத்தது. அந்தப் பையன் அவள் வார்த்தைகளைப் புரிந்து கொண்டானோ இல்லையோ அவளுடைய உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்து கொண்டான். இந்த அவளுடைய உணர்ச்சிப் பெருக்கை பெருமளவில் பாராட்டியது கேஜின் தாயார் ஆகும். அவள், எமிலி ஒரு பேராச்சரியம் மிக்க சிறிய தாயார் ஆவாள். அந்தப் பையனுக்கு அது ஒரு பேரதிர்ஷ்டம் என்று உரைத்தாள்.
நாளின் முடிவில், கேஜ் இரு தாய்களுக்குக் குழந்தையானான். இருவருமே அவன் மீது அன்பைப் பொழிந்தார்கள். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
0 comments:
Post a Comment