இலங்கையின் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சவிற்கு சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், பாரிய எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டுஅரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சிக்கு பதிலாக விலை அதிகரிப்பையும், பாரிய பொருளாதார பின்னடைவையும் மக்களின் தலையில் சுமத்தியது.
இந்த நிலையில் சரியான நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க நாட்டின் பிரதமராக அதிரடியாக பதவியேற்ற உங்களுக்கு எனது கட்சியின் சார்பாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் சிறப்பான ஆட்சியினை மேற்கொண்டு நாட்டிற்கு நிலையானஅபிவிருத்தியையும் நீடித்த அரசியல் தீர்வையும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
அந்த வகையில் தங்களின் சிறப்பான ஆளுமையை பயன்படுத்தி சிறுபான்மைமக்கள் மீது அதிக கவனமெடுத்து அவர்களின் எதிர்பார்புக்களையும், அபிலாசைகளையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment