ஜப்பான் நாட்டில் ஒகினோஷிமா தீவு...
ஷிண்டோ புத்த மார்க்கத்தை தழுவிய துறவிகளின் இல்லம் என யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தீவு.
ஷிண்டோ துறவிகளின் பிரம்மச்சரியம் காப்பதாகவும் ஷிண்டோ புத்த மார்க்கத்தின் புனிதம் போற்றுவதாகவும் இன்றுவரை எவ்வயதுப் பெண்களும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக நாளுக்கு 200 ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், உடல் தூய்மைக்காக கடலில் நிர்வாணமாகக் குளித்து புனிதத்துவத்தை உருவாக்கிக்கொண்டே தரிசனத்திற்கும் செல்லலாம்.
பெண்களின் இயற்கை உபாதைகளும், பிரசவம், மரணம் போன்ற நிகழ்வுகளும் புனித்துவத்தை கெடுக்கும் என்ற தொனிப்பில் இது போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களைக் கூட புனித பூமிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
குறிப்பாக வழியிலே பெண்கள் செல்லக்கூடாத பகுதியை எல்லைப்படுத்தி எல்லைப் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. சுமார் 1300 வருட பாரம்மரியத்தைக் காக்கும் முகமாக எப் பெண்களும் அதனைக் கடந்து செல்ல எத்தணிப்பதுமில்லை.
கலாச்சார சீரழிவை உருவாக்க ஓர்சில பெண்கள் எத்தணித்தபோதும், அவ்வாலய துறவிகளின் நிர்வாகம் கூறும் அறிவுரையை மதித்து திரும்பிவிடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment