நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, October 20, 2018

ஏரியா விட்டு ஏரியா போய் ரௌடித்தனம் செய்தால் இதுதான் நடக்கும்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை சீருடையில் இருந்த மாணவனை தாக்கிய இ.லங்கை போக்குவரத்துசபை பேரூந்து சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம்  பனிக்கன்குளம் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

கடந்த வியாழக்கிழமை பனிக்கன்குளத்திலுள்ள பேரூந்து தரிப்பிடமொன்றில் பாடசாலை சீருடையில் நின்ற மாணவனை,பேரூந்து சாரதியொருவர் நையப்புடைத்துள்ளார். பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற, பருத்தித்துறை சாலை பேரூந்து சாரதியே இந்த அடாவடியில் ஈடுபட்டார்.

இது தொடர்பில் மாணவனின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பருத்தித்துறை சாலையுடன் தொடர்புகொண்ட மாங்குளம் பொலிசார், குறித்த சாரதியை நேற்று சனிக்கிழமை பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர்.

நேற்று காலை வரையும் அவர் பொலிஸ் நிலையம் வரவில்லை.

இதையடுத்து பனிக்கள்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், உறுப்பினர்கள், மின்னல் இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, பனிக்கள்குளம் சந்தியில் காத்திருந்தனர். பருத்தித்துறை சாலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பெரூந்தை வழிமறித்தனர். அந்த பேரூந்தில், மாணவனை தாக்கிய சாரதி, நடத்துனர் இருக்கவில்லை. அவர்கள் வரும்வரை பேரூந்து புறப்பட அனுமதி தர முடியாதென பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து, அந்த பேரூந்து நடத்துனர் பருத்தித்துறைசாலையுடன் பேசி, மாணவனை தாக்கிய சாரதி உடனடியாக பொலிஸ் நிலையம் வருவார் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பேரூந்து பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மாணவனை தாக்கிய பருத்தித்துறை சாலை பேரூந்து சாரதி பொலிஸ் நிலையம் சென்றார். அவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment