வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்
இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது.
கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த இதனை குறிப்பிட்டார்.
கடந்த வருடம் இவ்வாறான 3,600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதன்காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறியாத நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் ரொசான் சந்திர குப்த எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment