இதன் போது குறித்த விரிவுரையாளரின் இறப்பு ஏற்பட்ட விதம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மன்றிற்கு இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இதனால் நீதிவான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மன்றிற்கு இறந்த விரிவுரையாளரின் கணவன் வன்னியூர் செந்தூரன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் விரிவுரையாளரரின் தாய் சகோதரர்களும் விசாரணைக்காக வந்திருந்தனர்.
மேலும் குறித்த விரிவுரையாளரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார். திருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment