கிளிநொச்சியில் பன்னிரண்டு வயது சிறுமியொருவர் குழந்தை பிரசவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மல்லாவியை சேர்ந்த குறித்த பன்னிரண்டு வயது சிறுமியொருவரின் உடலில் ஏற்பட்ட அசாதாரண மாற்றம் மற்றும் உடல் வலியையடுத்து மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரை அம்யூலன்ஸ் வண்டியில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். கிளிநொச்சிக்கு வரும் வழியிலேயே சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment