கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம் பெண்ணுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
மென்பொருள் மற்றும் தொழில்துறையை அடுத்து மருத்துவ உலகிலும் அறிவியல் தொழில்நுட்பமானது வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்குச் சான்றாக, புதிய சாதனை ஒன்று ஆசியக் கண்டத்தில் நிகழ்ந்துள்ளது. பெண்களின் முக்கிய உறுப்புகளில் ஒன்று கருப்பை. உருப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அதன் வரிசையில், கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவ உலகில் செய்யப்படுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். முன்னதாக அவருக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து வாடகைத்தாய், தத்து எடுத்தல் போன்ற பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர் நீங்களே உங்கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார். அதன் பிறகு மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்க முடிவு செய்தார். கடந்த வருடம் மே மாதம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து நீண்ட நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார் மீனாட்சி. உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment