கந்தானை – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அமுனுகொட சஞ்சீவ, ஜாஎல – தடுகம் ஓயாவில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை பேலியகொடவிற்கு அழைத்து வரும் வழியில் தனக்கு சிறுநீர் வருவதால் வாகனத்தை நிறுத்தமாறு கோரியுள்ளார்.
பல முறை அவர் இவ்வாறு கோரியதிற்கு அமைய வாகனத்தை நிறுத்திய வேளை, சந்தேக நபர் தப்பிச் சென்று தடுகம் ஓயாவில் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர், தற்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு தலைவரின் பிரதான உதவியாளர் என பொலிஸார் இனங்கண்டுள்ளது.
கந்தானை – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சிற்றூர்தியில் பயணித்த பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பின்னர் தவறான பெண்ணையே துப்பாக்கி தாரிகள் இலக்கு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பரிதாபமான உயிரிழந்த பெண் இத்தாலியில் வாழ்ந்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்கு திருப்பியுள்ளார். எனினும் அவரது கணவர் தற்போது இத்தாலியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment