கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவிகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.
பட்டவல வீட்டில் வசிக்கும் மாணவி தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது காதலனையும், நண்பியையும், அவரின் காதலனையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில், குறித்த மாணவியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அவ்வேளை தந்தையைதாக்கிவிட்டு காதலர்கள் தப்பிசெல்லவே, குறித்த தந்தை பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment