கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரி இளைஞர்கள் அமைப்பினால் கொழும்பு காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு முன்னால் வீதி தடைகளை பயன்படுத்தி பொலிஸார் வீதிகளை மறைத்துள்ளனர்.
அத்துடன் நீர் பிரயோகம் மேற்கொள்வதற்காக அவ்விடத்திற்கு நீர் பவுசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment