பொதுமக்களின் பணத்தில் விடுதலைப் புலிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவது எந்தளவுக்கு நியாயமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கோத்தபாய ராஜபக்ச, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, தற்கொலை குண்டுதாரிகள் காணாமல் போயிருந்தாலும் அவர்களுக்கும் இழப்பீடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
போர் காரணமாக உயிரிழந்த, காணாமல்போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு செலுத்தும் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் இணங்கியமைக்கு அமைய இந்த இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் போர் காரணமாக கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட, காணாமல் போன தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment