இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் நிரோஷன் திக்வெல்ல இணைத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் ,
நிரோஷன் திக்வெல்ல மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார் என கிரிக்கட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி பெற்ற படுதோல்வியின் பின்னர் இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணித் தலைவர் பதவியில் இருந்து ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியிருந்தார்.
அதனை தொடர்ந்து குறித்த பதவிக்காக டெஸ்ட் அணியின் தலைராக செயற்பட்ட தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment