பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த உரிமையும் இல்லை.
தமிழ் ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேற மறுத்தால், நாங்கள் மக்களின் ஆதரவுடன், அலரி மாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவோம் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் ஏற்கனவே கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர் என்றும், ரணில் விக்ரமசிங்க கௌரவமான முறையில் வெளியேறாவிடின், அவர்கள் அலரி மாளிகைக்குள் நுழைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment