பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் சட்டநடவடிக்கை எவ்வாறு இடம்பெறுகிறது என அவதானத்துடன் இருப்பதாக சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்த பிரதி
தனது பிள்ளைக்கு சுகயீனம் ஏற்பட்டிருந்தால் அங்கு சமூகமளிக்க முடியவில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்ட தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மற்றும் காவல்துறை மத்திய ஆயுத களஞ்சியசாலையில் இருந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்டிருந்த எல்.எம்.ஜி ரக துப்பாக்கி தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
எனினும் இந்த வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு வேறு ஒரு தினம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தெடர்பில் ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்றைய தினம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
எனினும் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு குறித்த பிரிவு செயற்பட வேண்டும் என சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment