நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, October 16, 2018

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் குடும்பம்!


பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

60 வயதான அவர், கடந்த 2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தொழில் விசா நிறைவடைந்த காரணத்தினால் அவர் தனது குடும்பத்தினரான மனைவி, மகன் மற்றும் இரண்டு மகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

27 மணி நேர விமான பயணத்தில் அவரை கண்கானிக்க 4 வைத்தியர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என பாலச்சந்திரனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Heathrow விமான நிலையத்திற்கு அருகில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த குடும்பத்தினர் திருப்பி அனுப்புவதற்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் பாலசந்திரன் மற்றும் குடும்பத்தினர் தன்னார்வமாக பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்காக விமானத்தில் ஏறிய போதிலும், பாலசந்திரன் நோய்வாய்ப்பட்டமையினால் விமானத்தில் இருந்து இறங்க நேரிட்டுள்ளது.

தாம் பிரித்தானியாவை விட்டு செல்ல தயார், எனினும் மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம் என்பதனால் தங்களுக்கு 4 வைத்தியர்கள் வேண்டும் என பாலசந்திரனினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பிரித்தானிய அதிகாரிகள் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job