ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சந்திப்பின்போது கொலை சதி முயற்சி குறித்து ஜனாதிபதி அறிந்திராத பல விடயங்களை முன்னாள் ஜனாதிபதி அவரிற்கு தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியுடன் இணைந்து காபந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழு ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment