
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் வலுப்பெறும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பாகங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல், மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க சாரதிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
இதற்கமைய, மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் அவர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment