வவுனியாவிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மூன்று முதலைகள் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குருந்துப்பிட்டி பகுதியிலுள்ள வீட்டு உரிமையாளர் ஒருவருடைய கிணற்றிலேயே குறித்த முதலைகள் வீழ்ந்துள்ளன.
ஏழு அடி நீளமான பெரிய முதலை ஒன்றும் மூன்று அடி நீளமான இரண்டு முதலைக் குட்டிகளும் குறித்த கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
நிலவிவரும் சீரற்ற கால நிலையினால் பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவே இந்த முதலை வீட்டைத்தேடி வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
குறித்த முதலைகளினை கிணற்றினுள் அவதானித்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக
குறித்த அறிவித்தலுக்கமைய அவ்விடத்திற்கு வந்த வன விலங்குகள் பாதுகாப்புத்திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலைகளை கடும் கடினத்திற்கு மத்தியில் மீட்டுச் சென்றதுடன் மடுப் பிரதேச வனத்தில் உள்ள நீரேந்து பகுதியில் விடுவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment