மாகாணசபையின் ஆயுள்காலம் முடிந்ததற்கு மறுநாள்- 25ம் திகதி- தமது கைவரிசையை ஆரம்பிக்கப் போவதாக இன்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகங்கள், மக்களிடம் பெரு வரவேற்பை பெற்றுள்ளன. குறைந்த விலையில், தரமான, பாரம்பரிய உணவு கிடைப்பதுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது இந்த திட்டத்தின் மூலம்.
யாழில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்திற்கு இதுவரை எந்த பெயரும் சூட்டப்படாமல் உள்ளது. இது தொடர்பாக முழுமையான ஆவணங்களுடன் தமிழ்பக்கம் பல மாதங்களின் முன்னரேயே விரிவாக பதிவிட்டிருந்தது.
மாகாண விவசாய திணைக்களத்தின் உயரதிகாரியொருவர், மத்திய விவசாய அமைச்சுடனான நெருக்கம் காரணமாக, மத்திய விவசாய அமைச்சின் நிதியையும் பெற்று இந்த திட்டத்தை செயற்படுத்தினார். பெயர் சூட்டும் விவகாரத்தின் போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க அதற்கு ஹெலபோஜன் என்ற பெயர் வைக்கப்பட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார். மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகளும் அதற்கு தயாராக இருந்த போது, முதலமைச்சர் அதை தடுத்து நிறுத்தியிருந்தார்.
அப்போது விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்காவிற்கு முதலமைச்சர் எழுதிய கடிதமொன்றையும் தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. ஹெலபோஜன் என்ற பெயரை வைக்க வேண்டுமென அடம்பிடிக்கிறீர்கள், ஹெல என்பதற்கு ஈழம் என்ற அர்த்தமும் வரும். ஈழ உணவகம் என்றும் தமிழில் பெயர் சூட்டுகிறோம் என்ற சாரப்பட முதலமைச்சர் கடிதம் எழுத, துமிந்த திசநாயக்கா கப்சிப் என இருந்து விட்டார்.
இன்று (21) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் உரையாற்றிய போது, அது மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு நாடெங்கும் ஹெலபோஜன் என்ற பெயருள்ளது. இங்கு சிங்கள பெயர் வைக்காவிட்டாலும், பாரம்பரிய உணவகம் என்ற பெயர் வைக்கலாம். நாம் இனி அப்படியான பெயர்தான் வைப்போம் என்றார்.
அதாவது, அம்மாச்சியென்ற மாகாணசபையின் பெயருக்கு மூடுவிழா நடத்தி விட்டு, மத்திய அரசின் ஹெலபோஜனை- வேறு பெயர்களில் கொண்டு வர அங்கஜன் இராமநாதன் திட்டமிடுகிறார். மத்திய அரசுடன் பெயர் விவகாரத்தில் முரண்பட்ட அம்மாச்சியென்ற பெயரே இனி இருக்ககூடாதென்பது அவரது திட்டமாக இருக்கலாம்.
என்ன பெயர் வைப்பதென்பதை வரும் 25ம் திகதி- மாகாணசபை கலைந்த பின்னர்- தான் அறிவிப்பேன் என்றும் அங்கஜன் குறிப்பிட்டார்.
அம்மாச்சி மாகாணசபையின் கருத்திட்டமல்ல, அது மத்தியின் கருத்திட்டம் என்ற வாதத்தையே இன்று அங்கஜன் முன்வைத்தார்.
மத்திய அரசின் கருத்திட்டமெனில் ஏன் வடமாகாணசபை அமைவதற்கு முன்பாக மத்திய அரசு அதை வடக்கில் அமைக்கவில்லை? மாகாணசபைதானே அதை இங்கே ஆரம்பித்தது? போன்ற கேள்விகளை ஊடகவியலாளர்களும் எழுப்பவில்லை.
சாதாரண உணவகம் ஒன்றின் பெயரையே மாகாணசபை கலைந்ததும் மத்திய அரசின் அமைச்சர்கள் இஸ்டம் போல விளையாட முடிகிறதென்றால், அதுவும் மாகாணசபை முறைமையின் அதிகாரமின்மையை வெளிப்படுத்தும் சம்பவம் அல்லவா!
0 comments:
Post a Comment