இனவாதம் மற்றும் மதவாதம் என்ற வைக்கோல் குவியலின் மீது தீவைக்கும்
நோக்கில் எதிரணியினர் செயற்பாட்டு வருவதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற உதா கம்மான வீட்டு திட்டத்தின் மூலம் நிர்மானிக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறுகிய வழியில் பிரபல்யம் அடைந்து ஆட்சியை கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையிலும் அலரி மாளிகையிலும் குடியமர முயற்சிக்கின்றனர்.
அதன்மூலம் நாட்டை தீவைக்கும் முயற்சியே இடம்பெறுகின்றது.
எதிர்தரப்பினர்
இந்த முயற்சியின் மூலம் எதனையும் உருவாக்க முடியாது.
மாறாக அழிவையே எதிர்நோக்க நேரிடும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இதனிடையே, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment