நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 12, 2018

அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய இறுதிப் பயணம்...பல்கலைகழக மாணவர்கள் தலைமையில்!


அரசியல் கைதிகளின் விடுதலையை வென்றெடுக்க நாளை அனுராதபுரம் நோக்கி அனைவரையும் அணிதிரளுமாறு யாழ். பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று வவுனியா நகரை அடைந்தது தற்போது மதவாச்சி வரை செல்கின்றது.

   
       
   
 

இந்நிலையில் நாளைய தினம் காலை மாதவாச்சியில் இருந்து ஆரம்பித்து மதியம் 2 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி செல்லவிருப்பதால் குறித்த இறுதிப் பயணத்தில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகள் கடும் குற்றச்செயல்களை செய்த குற்றவாளிகள் அல்ல. அன்றைய சூழலில் கட்டளையிட்டவர்கள் எல்லாம் நாடாளுமன்ற கதிரைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் இந்த சூழலில் சாதாரணமான செயற்பாடுகளைச் செய்தவர்கள் பல ஆண்டுகளாக சிறைக்கூடங்களிலே இருக்கிறார்கள்.

இவர்களது பிரச்சினையை இலங்கை அரசாங்கம் அரசியல் பிரச்சினையாகப் பார்த்து, அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலைசெய்ய வேண்டும்.

அவர்கள் வாழ வேண்டியவர்கள், அதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்கவேண்டும். அவர்களை மனிதாபிமான ரீதியாக உணர்ந்து விடுதலைச் செய்யவேண்டும்.

நாம் இன்று வவுனியாவை அடைந்துள்ளோம். நாளை காலை எமது பயணத்தை மதவாச்சியில் இருந்து ஆரப்பித்து அனுராதபுரத்தை அடையவுள்ளோம்.

   
       
   
  நாம் கடந்து வந்த பகுதிகளில் எமக்கு ஆதரவு வழங்கிய மக்கள் நாளைய தினம் எமது இறுதிபயணத்தில் அனுராதபுரம் சிறைச்சாலை வரை எம்முடன் பயணிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

எனவே நாளைய இறுதிப்பயணத்தில் அனைத்து தரப்புகளும் பொறுப்புகைளை உணர்ந்து எமது போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்ற செய்தியை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment