வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கொப்பேக்கடுவா நினைவு சிலையருகில் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் மகிந்தவின் ஆதரவாளர்கள் இன்று காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கொப்பேக்கடுவா நினைவு சிலையருகில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்தினா தலைமையில் கொப்பேக்கடுவா சிலைக்கு தேசியக்கொடி அணிவித்து, மலர் மாலை அணிவித்து பட்டாசு கொளுத்தியுள்ளனர்.
இதன்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகிந்தவை வாழ்த்தி கோசமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment