பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரின் முதல் பெண்மருத்துவராகவும், இதயச் சிகிச்சை நிபுணராகவும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் (Strasbourg) நகரில் வசிக்கும் யோன் மத்தியூஸ் தம்பதியரின் புதல்வி பெயாற்றிஸ் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) மருத்துவக் கல்லூரியில் மருத்துவருக்கான ஆறாண்டுகாலப்படிப்பை முடித்து, அதற்குரிய பட்டயத்தைப் பெற்ற பின்னர் இருதய சிகிச்சையில் மருத்துவ உயர் கல்வியை Rennes நகரில் முடித்து அதற்கானச் சிறப்பு பட்டத்தை வைத்திய கலாநிதிகள் முன்னிலையில் கடந்த 16ம் திகதி பெற்றுக்கொண்டார்.
தான் விரும்பியே மருத்துவக் கல்வியைத் தேர்வு செய்த தாகவும், அற்பணிப்புடன் பணியாற்றுவதே தமது நோக்கமென்றும், பத்தாண்டுகள் இத்துறையில் தமது கல்விக்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவுமிருந்த மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரிய பெருமக்களுக்கும், பெருமைக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பலமாக இருக்கிற பெற்றோர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று பெயாற்றிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment