வடமாகாண முதலமைச்சா சீ.வி.விக்னேஸ்வரன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பால் மதவை சேனாதிராஜா மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் மூலம் தமது அரசியல் பயணம் தொடரும் என முதலமைச்சர் இன்று பகிரங்கமாக கூறியிருந்தார்.
இதனால் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மகிழ்ச்சியில் உள்ளார்.
இவருடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்றால், தாம் போட்யின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு போட்டிய முடியும் என்பதேயாகும்.
வடமாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில். எதிர்வரம் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பலத்த போட்டிகள் எழுந்திருந்தன.
விக்னேஸ்வரன் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் நிச்சயமாக அடுத்த மாகாண சபைத் தேர்தலில் அவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதாகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவே நிறுத்தப்படுவார்.
இதனால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment